நான் கண்ட இன்பம்
இரு கற்சுவர் இடைவெளியில் ஓர் இயற்கைக்காட்சி
பலதரப்பட்ட மரங்கள்
பார்வைக்கு அழகாக...
பசுமையாக...
காற்றின் இசைக்கு தலையாட்டி
சாய்ந்து கூத்தாடும் இனிமை
ஒன்றையொன்று நலம் விசாரித்து
தொட்டு விளையாடும் பசுமை அவை...
பார்த்தவிழி விலக மறுக்க
நிற்கும் நிலை நான் மறக்க
மனதிற்குள் மெல்லிசை
புதுமையாய் பொன்சிரிப்பு...
கற்றுக்கொண்டேன் புதிய பாடம்...
சுவர்களுக்கு இடையேதான் வாழ்க்கை
இருப்பினும், நிழல்கொடுத்து
பூ, பழம்கொடுத்து,
காற்றுக்கு தலையசைத்து,
சுத்தக் காற்றை
நமக்களிக்கிறது
இவனும் ஒரு ஆசான் தான்
உணர்ந்துகொண்டேன் இன்று...