நீலக்குயில் தேசம்26---ப்ரியா

சாமியாரை பார்த்துவிட்டு வந்த தாத்தா இனி வரும் இந்த ஐந்து நாட்களில் அவளது கனவில் வரும் அந்த முன்ஜென்ம காதலனை பார்ப்பாள் என்றும் அதுமட்டுமல்ல அவளுக்கு ஏதோ பிரச்சனை வரும் என்றும் சொன்னதால் அவருக்கு பெரும் குழப்பமாக இருந்தது என்ன செய்வதென்றறியாமல் யோசனையில் வீட்டுக்கு வந்தவர் சுசீலாவிடம் விபரத்தை சொன்னார்........கயலை ஒரு வாரத்துக்கு வெளியில் அனுப்பவேண்டாமென்றும் சொன்னார்.

நாளைக்கு கயல் சுற்றுலாவுக்கு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டாள் என்ன பண்றது மாமா என்றாள் சுசீ.

அதெல்லாம் எனக்கு தெரியாது 5நாட்கள் அவள் வெளியில் செல்லக்கூடாது சுற்றுலாவும் எதுவும்தான் ஏதாவது பேசி அவளை வெளியில் செல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என தாத்தா பிடிவாதம் பிடிக்க......என்ன செய்வதென்று யோசித்தாள்???

மாமா பிடிவாதக்காரர்தான் ஆனால் கயல்விழி அவரை விட பிடிவாதக்காரி ஆச்சே.இரண்டு பேருக்குமிடையில் இருந்து நான்தான் அவஸ்தைப்படுகிறேன் என்று பெருமூச்சுவிட்டவள்...எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம் என்று போய் படுத்தாள்.

ஆனால் இங்கு நடந்தது எதுவுமே கயலுக்கு தெரியாது.

காலையில் சரியாக 5மணிக்கு கல்லூரியில் அனைவரும் வந்துசேர்ந்துவிடவேண்டுமென்று அறிவித்திருந்தனர்.

அதிகாலையில் 3மணிக்கெல்லாம் எழும்பிவிட்டாள் கயல் தன் தோழிகளையும் எழுப்பி விட்டுவிட்டு தான் செல்ல தயாரானாள்.

இவளது சலசலப்பு சத்தம் கேட்டு மற்றவர்களும் எழும்பினர்.......தாத்தா சாமியார் சம்பவங்களை எப்படி சொல்வது எப்படி இவளை செல்லவிடாமல் தடுப்பது என்று யோசித்துக்கொண்டே அவளது ரூமிற்கு சென்றாள் சுசீலா....!

அப்பொழுது கயல் குளித்துக்கொண்டிருந்தாள் அவளது வரவை நோக்கி காத்திருந்தாள் சுசீலா....அந்நேரம் தாத்தாவும் வந்து சைகையால் சொல்லிவிட்டு சென்றார்.......ம்ம்ம்.....என்று மௌனமாய் தலையசைத்தாள் அவள்.

சிறிது நேரத்தில் குளித்துமுடித்து வெளியில் வந்தாள் கயல்....தன் தாயின் முகத்தை பார்த்ததுமே ஏதோ சொல்ல வந்து தயங்கி தயங்கி நிற்பதை கண்டுபிடித்தாள்.

என்ன அம்மா.....என்ன யோசனை என்று கேட்டுக்கொண்டே கிளம்பிக்கொண்டிருந்தாள் கயல்.

கயல் அது வந்து வந்து......என்று குரலை தாழ்த்தினால் சுசீலா.....

அதான் வந்துட்டீங்க இல்ல அம்மா மேல சொல்லுங்க என்று தாயை கலாய்த்தாள்.

நீ சுற்றுலாவுக்கு போகவேண்டாம் என்று பளிச்சென்று சொல்லிவிட்டாள் அவள்.......தன் தாயை ஒரு அனல்பார்வைப்பார்த்தாள், பதில் பேசாமல் தன் வேலைகளை செய்துகொண்டிருந்தாள்.

ஏய் உன்கிட்டதான்டி சொல்றேன் நீ எங்கயும் போகவேணாமென்று மறுபடியும் சொன்னாள்...

கோவம் தலைக்கேறியவள் ஏன்? ஏன் போகவேணாம்? நான் போவேன் என் பிரண்ட்ஸ் எல்லாம் வாராங்க இதான் கடைசி வருடம் போவேன் என்று கொஞ்சம் சத்தமாக அதட்டலாக கயல் சொல்ல தாத்தாவும் அங்கு வந்தார்..........

இங்க பாருங்கதாத்தா எல்லாமே ரெடியா போகத்தயாராகும் போது அம்மா போகவேணாம்னு சொல்றாங்க என்று தன் தாயை குறை சொல்லி தாத்தாவிடம் போய் ஒட்டிக்கொண்டாள்......?

ஆமா கயல்குட்டிமா போகவேணாம் என்று தாத்தாவும் சொல்ல......இன்னும் கோவமும் வருத்தமு ஆனாள் அவள்.

ஏன்னு சொல்லுங்க தாத்தா?ஏதாவது காரணம் இருந்தா சரி காரணமே இல்லாம போகவேணாம்னு சொன்னா எப்டி என்றாள்.....அவளின் கேள்வியும் நியாயம்தானே?காரணத்தை சொல்லிடலாம் என நினைத்தவர்.......சாமியாரிடம் சொன்ன தகவல்களை சொன்னவர் ஆனால் கனவுக்காதலனை சந்திப்பாள் என்று சொன்னதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்.

"கனவுக்காதலனை பார்ப்பாள்" என்று சாமியார் சொன்னதை சொன்னால் நிச்சயம் இவள் போகாமல் இருக்கவே மாட்டாள் போய்விடுவாள் அதனால் அந்த விஷயத்தை மட்டும் அவளிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார் தாத்தா.......!

இதைக்கேட்ட கயல் சிரித்தாள்.....என்ன தாத்தா இப்போ கூட இத நம்புறீங்களா?முதலில் நானும் நம்பினேன் ஆனா அப்புறம்தான் இதெல்லாம் சும்மா நம்ம கற்பனை என்பதை உணர்ந்துகொண்டேன் பயப்படாதீங்க எனக்கு ஒன்னும் ஆகாது அப்படியே எனக்கு கண்டிப்பா இந்த ஐந்து நாள்ல ஏதாவது நடக்கும்னா நான் வீட்டுல இருந்தாலு தேடி வந்து நடக்கும் தாத்தா எல்லாம் உங்க மூடநம்பிக்கை என்று அதை அலட்சியமாய் முகபாவனையிலும் பேச்சிலும் காட்டினாள் கயல்விழி......!

ஆமா மாமா வாரது எங்க இருந்தாலும் வரும் அவ ஆசைப்பட்டுட்டா கிளம்புற நேரத்துல தடுக்குறது அவ்வளவு நல்லது இல்ல நாமே அவ மனச புண்படுத்தவேண்டாம் போகட்டும் என்று மகளுக்கு சாதகமாய் தாய் பேச வேற வழி இல்லாமல் சரி என இரட்டை மனதுடன் சம்மதம் சொல்லி அனுப்பினார் தாத்தா........!

அப்பாடா சனி விலகிடிச்சி என்று ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு தோழிகள் மூவரும் சேர்ந்து வீட்டிற்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு இன்ப சுற்றுலாவிற்கு செல்ல ஆயத்தமானார்கள்........!

சனி தொலைந்து என அவள் நினைத்தாள் ஆனால் இனிதான் சனி ஆரம்பம் என்பதை அவள் அறியவில்லை???

காரில் சென்றதால் 5மணிக்கு முன்னாலேயே கல்லூரிக்கு போய் சேர்ந்தனர் அங்கு மற்ற மாணவர்களும் வந்து நிற்க.......அனைத்து மாணவர்களும் வந்துவிட்டனரா?என உறுதிபடுத்திவிட்டு ஒவ்வோர் மாணவர்களாக அங்கிருந்த வேன்களில் பெயர் வாசித்து ஒவ்வொரு துறை வாரியாக உட்காரவைத்துக்கொண்டிருந்தனர்...........

தன் அழகிய காந்த விழியால் இவள் அவனை சுண்டி இழுக்க அவன் கண்கள் இவள் கண்களை நோக்கும் நேரம் பூகம்பம் போன்றதோர் உணர்வு.....அவனுக்கு தெரியாமல் அவனை ரசித்துக்கொண்டிருந்தாள் குவளைக்கண்காரி.

இவர்களுக்கான பெயர்கள் வாசித்து ஏறி அமர்ந்த பின்தான் தெரிந்து கொண்டாள் தன் காதலன் ராகேஷும் இவளும் வேறு வேறு வேன் என்று......இருவருக்குமே ஏமாற்றமாயிருந்தது அவனை இனி கொடைக்கானலுக்கு சென்ற பிறகுதான் பார்க்க முடியும் அதற்கு முன் வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் பேசிக்கொள்ளலாம் என நினைத்தவள் மறுபடியும் தான் கொண்டு வந்த கிப்டை எடுத்துபார்த்துக்கொண்டாள்.........அதுமட்டுமல்ல அதில் ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தாள்.

தனக்கு வரும் அந்த கனவு பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஏற்கனவே சாமியார் இவளிடம் சொல்லியிருந்தும் அதை பொருட்படுத்தாமல்........ராகேஷ்க்கு கொடுக்கும் அந்த காதல் பரிசுடன் அன்று முதல் கடைசி நாள் தான் கண்ட கனவு தேசம் மற்றும் கனவுக்காதலன் விஷயங்கள் அனைத்தும் எழுதி அவனிடம் இரண்டையும் சேர்த்து கொடுக்க தயாராய் வைத்திருந்தாள்.

அனைவரும் கொடைக்கானலை நோக்கி பயணமானார்கள் ..........

___________________________________________________________________________________________________________________________

தன் நண்பர்கள் சொன்னதை வைத்துப்பார்க்கும் போது கயல்விழிக்கு வேறு காதல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது அதற்கிடையில் விஷயம் தெரியாமல் நாம் அவளை மனதில் சுமந்து கொண்டு இருப்பது தவறு......என்னதான் இருந்தாலும் அவள் நம் மாமாப்பொண்ணுதான் நமக்கு அவளிடம் எல்லா உரிமையும் உண்டு அதனால் தைரியமாக பேசலாம் யாரும் எதுவும் சொல்லப்போவது இல்ல சொல்லவும் முடியாது....நாம் இந்த இடத்திலிருந்து கிளம்புவதற்கு முன் அவளை போய் பார்த்து பேசவேண்டும் என நினைத்தவன் உடனே கிளம்பவும் முடிவெடுத்தான்.
காலையில் விட்டுவைத்த தனது வேலைகளை முடித்துவிட்டு தன் நண்பர்களுடன் கயல்விழியின் கல்லூரிக்கு புறப்படத்தயாரானான் மதன்.

அதற்குமுன் தன் தங்கையிடம் பேசிப்பார்க்கலாம் என அவளுக்கு அழைப்பைக்கொடுத்தான்......சிறிது நேர உரையாடலுக்குப்பின் கயல்விளியைப்பற்றிய பேச்சை தொடங்கினான்.......

அண்ணனது இன்றைய பேச்சு வழக்கத்தை விடவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே என்பதை அவன் பேச்சிலேயே உணர்ந்து கொண்டாள் ப்ரியதர்ஷினி.

என்னதான் சொல்றான் பார்ப்போம் என கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு அவனது தயக்கமான பேச்சு.....அந்த நிறுத்தம், யோசனை, பதற்றம் என அனைத்தையும் வைத்து கயலை காதலிக்கிறானோ என சந்தேகம் வந்தது.

கயலுக்கு காதல் உண்டா? என்ற அவனது அடுத்த இந்த கேள்வியை வைத்து அதை உறுதிபடுத்திக்கொண்டாள்.
என்ன அண்ணா என்று வேணுமென்றே மறுமுறையும் கேட்டாள் தயங்கி தயங்கி சொன்னவனின் வார்த்தையை வைத்து விஷயத்தை புரிந்து
கொண்டவள்........ஆம் என்று நிதானமாய் பதிலளித்தாள்.

ஏய்! எ.......ய்........என்ன சொல்றா உண்மையாவா?என்று பதற்றத்துடன் இவன் கேட்க? மறுமுனையில் தன்னையும் மீறி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்தாள் ப்ரியா..............!






தொடரும்.........!

எழுதியவர் : ப்ரியா (5-Mar-15, 4:33 pm)
பார்வை : 240

மேலே