என்னவளே -தொடர்கதை
என்னவளே-தொடர்கதை
பகுதி-14
சியாம் வீட்டிற்கு சென்று தன் பெற்றோரிடம் கல்பனாவை பற்றியும் அவளது குடும்பத்தை பற்றியும் கூறி பெற்றோர்களை அவளது இல்லத்திற்கு சென்று பெண் கேட்க வலியுறுத்தினான் .
சியாமின் அம்மா என்னப்பா இப்படி திடீர்னு வந்து சொன்னா நாங்க என்ன பண்றது .அந்த பொண்ண பத்தியும் அவளது குடும்பத்தை பத்தியும் விசாரிக்கணும் நம்ம சொந்த பந்தங்களுக்கு சொல்லணும் நாள் கிழமை பார்க்கணும் இரண்டு நாள்ல சொல்லனும்னு இப்பவே கண்டிசன் போடற வீட்ல எப்படி பொண்ணு எடுக்க முடியும் .உனக்கு என்ன குறைச்சல் மகாராஜா மாதிரி இருக்க . இருப்பா யோசிச்சு ஒரு முடிவு எடுக்கலாம் .கல்யாணங்கறது ஆயிரம் காலத்து பயிர் எடுத்தோம் கவிழ்தோம்னு பண்ண முடியாது என்றாள் சற்று விசனமாக ..
அம்மா நான் அவளை உயிர்க்கு உயிரா நேசிக்கறேன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்க தான் எனக்கு உதவி செய்யணும் என்று கூறிவிட்டு அலுவலகம் சென்றான் .அவன் சென்ற பின்பு சியாமின் அம்மா ராதா தன் கணவரிடம் என்னங்க அவன் இது வரைக்கும் நம்மகிட்ட எதையும் இவ்வளவு தெளிவா உறுதியா கேட்டதில்லை .அவன் இவ்வளவு தெளிவா சொல்றான்னா கண்டிப்பா அதுக்கு நாம நம்மாலான முயற்சி எடுத்தே ஆகனும்..நான் என் தங்கை கமலாவயும் அவ கணவரையும் வர சொல்றேன் நாளைக்கே போய் பேசிட்டு வந்துடலாம் என்றாள் மகிழ்ச்சியாக ..
ராமைய்யா பிள்ளை ராஜலக்ஷ்மி அம்மாளிடம் நான் சியாமின் ஊருக்கு சென்று அவன் குடும்பத்தை பற்றியும் சியாமை பற்றியும் விசாரித்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பினார் .
ராஜலக்ஷ்மி அம்மாளோ எதற்கு தேவையில்லாமல் வேலியில் போகும் ஓனானை வேட்டியில் எடுத்துவிட பார்குறீர்கள் அமைதியாக இருங்கள் என்றாள். இல்லை சியாமின் குடும்பம் எப்படி பட்டது அவனால் நம் பெண்ணிற்கு ஏதாவது பிரச்சனைகள் வருமா என்பதை பற்றி என் மனம் மிகவும் கவலையாக உள்ளது நான் என் நண்பன் ராமுடன் சென்று பார்த்துவிட்டு மாலைக்குள் திரும்பிவிடுவேன் என்று புறப்பட்டார் .
பகுதி-15
மாலை அலுவலகம் முடிந்து கல்பனா அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள்.எப்பொழுதும் சியாம் அவளுக்காக அங்கே காத்திருப்பான்.கல்பனாவின் வீட்டு தெருமுனை வரை இருவரும் பேசி சிரித்த வண்ணம் வருவது வாடிக்கை.அன்று காலை கல்பனா மிக கடுமையாக சியாமிடம் பேசியதால் அவன் இனி காத்திருக்க மாட்டான் என்று எண்ணி நடக்க தொடங்கினாள்.இருப்பினும் அவள் ஆசையாக அவன் என்றும் காத்திருக்கும் இடத்தை நோக்கினாள் அவன் அங்கே நின்றிருந்தான் அவள் மகிழ்ச்சியோடு பார்த்தும் பர்காதவளாய்
நடக்க தொடங்கினாள் .அவள் சிறிது தூரம் சென்று கண்டிப்பாய் அவன் நம்மை பின் தொடர்வான் என்ற நப்பாசையோடு திரும்பி பார்த்தாள்.அவன் வர வில்லை ..அவள் மனம் உடைந்தால் இனி சியாம் நம்மோடு பேச மாட்டான் தன்னோடு எங்கும் வர மாட்டான் இனி அவனுக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை
கண்களில் அவளது உத்தரவு இன்றியே கண்ணீர் கொட்ட துவங்கியது எதிரில் வருவோர் போவோர் ஒரு மாதிரியாக பார்பதாக உணர்ந்தால் ..அப்பொழுது சரியாக மழையும்
கொட்ட துவங்கியது ..அவசர அவசரமாக தன் கையில் இருந்த குடையை கைபயினுள் மறைத்தால் ..மழையில் நனைந்து கொண்டே சென்றாள்.சார்லி சாப்ளின் சொல்லியது போல் எனக்கும் மழையை பிடிக்கும் ஏன் என்றாள் நான் அழுவது மற்றவர்களுக்கு தெரியாது என்று தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டு வீட்டை அடைந்தாள்.
கல்பனா உறங்கிய பின்பு ராமைய்யா பிள்ளை ராஜலக்ஷ்மி அம்மாளிடம் சியாமை பற்றியும் அவனது குடும்பத்தை பற்றியும் நன்கு விசாரித்து விட்டேன் நல்ல குடும்பம் அடாவடி எதுவும் செய்ய மாட்டார்கள் .நாம் சொல்வதை ஏற்று கொள்வார்கள் எனக்கு இப்பொழுதான் கொஞ்சம்
கவலை தீர்ந்தது நாளை காலை முதல் வேலையாக சக்ரவர்த்தி குடும்பத்திற்கு போன் செய்து நாளை மாலையே அவர்களை வர செய்து திருமண நாள் குறித்து விடலாம் என்றார் நடக்க போவதை அறியாமல் ..
-------------- தொடரும் ------------------