நிலவெனும் குட்டி பயல்

இரவெனும் குட்டகைகுள்
வந்துவிட்ட வெள்ளை
பந்தம் அவன்.

மல்லிகை இனத்துக்கு தூரத்து உறவு.

வேஷம் மாறி வந்து,
நம்மை வழி மறைத்து வெண் பாஷை செய்திடுவான்.

வட்ட மெனும் சிற்றறைக்குள்
பரிணமித்தாழும்,
வெட்ட வெளியில் விருட்சமாகிட மந்ததில்லே.

ஒற்றை கண் சிமிட்டி
உலகுக்கு வெண் சோறு சமைப்பான்,
இவ்நிலவெனும் குட்டி பயல்....

எழுதியவர் : சிவசங்கர் சி (5-Mar-15, 7:38 pm)
பார்வை : 104

மேலே