வளர்வது
வளர்வது
* தொட தொட நீள ஆசை படுவது
முடிவே இல்லாது போக ஏங்குவது
தொடுபவர்களை சுண்டி இழுப்பது
தூக்கத்தை விரட்டுவது
கற்பனை வளர்ப்பது
காதல் செய்ய விதையிடுவது
நற்பண்பை அளிப்பது
நவ நாகரிகம் கற்பிப்பது
உலகை அறிமுகப்படுத்துவது
உற்சாகம் பெறச்செய்வது
தனிமையை மறக்க செய்வது
உணவை ருசிக்க செய்வது
வாழ்வில் பிடிப்பை தருவது
பல்லாயிரம் உண்டு இங்கு - அது
நல்ல புத்தகங்களே .....

