மனநிலை

வெள்ளிப்பாத்திரத்தில் விழுந்த
காசைப்போல பிறரின் ஓர் சிறிய
தவறு பேரிடியாய் ஒலிக்கிறது
நம் மனதில் பலநேரங்களில்

இது ஒர்வகை மனித இனம்

இன்னும் சிலர் கண்ணாடியாய்
இருந்து கவலையெனும் கீறல்களைத்
தாங்கிக்கொள்கிறார்கள்

மனிதா, மண்ணைப் போல் மனத்தை
வைத்துக்கொள்,
கீறலும் விழாது
இடியும் கேட்காது

எழுதியவர் : மதுராதேவி கலையரசி (7-Mar-15, 7:44 am)
Tanglish : mananilai
பார்வை : 108

மேலே