நின் பிரிவினிலே

பார்யைால் ருசி அறிய
என்னுயிரைத் தின்றவளே
காதலுக்கு பச்சைக்கொடி
காட்டியதுன் சிரிப்பே
செல்லமாய் நீ கிள்ள
செல்லுக்குள் பூ பூக்க
சோதிடம் என்னத்துக்கு
சோடியாய் நாம் செல்ல
அருகினில் நீயிருக்க
அமாவாசை வந்தாலென்ன?

நினைவினில் புயலே
கனவினில் மழையே
கண்ணிமைக்க மின்னலே
இயற்கையின் சீற்றமே

விடிஞ்ச பின்னும்
விசயம் தெரியல-நான்
தலைதுவட்ட துண்ட தேடுறேன்
நிறுத்தி தான் யோசிக்க
ஒரு நிமிசம்
ஒருத்தி செஞ்சததுமாயம்.

கண்ணே உன் உருவம் காணாம
கருவிழியில் காயம் உருவாக
மருந்தா கனவுல-உன்
முகம் பார்ப்பேனே.

பால்நிலா பாதியா ஆகாது
பூமியின நிழல் தான் அதில் விழுது
உன்னோட பிரிவின் நிழழும்
என் மேலே..

அடடா அருவா தீட்டயில
எழுகிற தீப்பொறி போல் தானே
தினம் உன் நினப்ப தீட்டயில
மாறிப்போகுதென் உசுரே.

நாளும் கிழமையும்
நகரவே இல்ல
மலையா நிக்குதம்மா.

கைப்பேசி கூட
கவிதை பேசும்
நீ அழச்சா.
மொத்த இரத்தமும்
உறஞ்சி போகும்
நீ சிரிச்சா.

சோலையில் தனியா நடக்கயில
கைப்பிடிச்சி கூடவே நீயில்லயே
நெருப்புத்துண்டா பூக்கள்
தெரியுதடி.

காலையில் கேக்குற குயிலோச
தினம் தினம் எனக்கது இடியோச
உன் குரல் கேக்காம எதுவும்
பிடிக்கலயே.

ரொம்ப நாளா நீ வரல
அந்தி மாலையில் கடலோரம்
கடலும் விசத்த குடிச்சிருச்சோ
நுரையா தள்ளுதே கரையோரம்

வண்ணமே
வழக்கமா நடக்குற
விசயங்கள் கூட
வருத்தமா மாறுதடி..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (7-Mar-15, 9:55 pm)
பார்வை : 76

மேலே