எவரும் வாசிக்க வேண்டிய படைப்பு

எவரும் வாசித்து மகிழ வேண்டிய படைப்பு

சரவணாவின் படைப்புகள் பெரும்பாலும் வெள்ளேந்தியாக நிஜங்களை காட்சியாக்கும் வல்லாண்மை மிக்கவை ...சமயங்களில் இப்படி வெள்ளப்பெருக்கின் பிரவாக உஷ்ண உமிழ்வு சிதறல்களாயும் சித்திரம் அளிக்கும் ஆற்றம் கொண்டவர் .காக்கும் கடவுள் ஒரு குறியீடே . அதன் மீதான அதீத நம்பிக்கையின் பிதுக்கல் கசிவுகள் மனிதனை பித்தன் நிலைக்கு இழுத்துச் செல்லும் . சங்கப்பாடல்கள் முதல் பாரதியின் சித்தர்கள் பாடல் வழியாகவும் மகாகவி ஈரோடு தமிழன்பனின் 'கடவுள் கொலை செய்யப்பட்டாரா 'எனும் கவிதை வரை கடவுள் மனிதனுக்கு எப்போதும் புதிராக புத்தம் புதிய கனவாகவும் இந்நொடி வரை தொடர்கிறது ...பகுத்தறிவு பகலவனும் சுயமரியாதை சிந்தனைகளும் பாரதிதாசன் பெரியார் வானம்பாடி கவிப்பறவைகளும் தீண்டாமை நெறி வீதிகளுக்குள் கடவுளை
தேரோட்டம் செய்தவைகளின் பற்றாக்குறைகளின் படைப்பிடிப்போ இப்படைப்பு ?????

வாழ்த்துக்கள் ஷரவ்ண்

கருவேலங்காட்டு கடவுள் - சரவணா


கிரகணத்தன்றைய அதிகாலையில்
படிதாண்டியிருந்தார் கடவுள்...

யுகங்களாய் விடலையாக
வீற்றிருந்தும் இதைகூட செய்யாதிருந்தால்
என்னும் ....
சுயப் பரிதாபமாயிருக்கலாம்...

நாத்திகச் சுரங்கள் பத்துக்கட்டையில்
முழங்குமே..!!
பயந்தும் இருக்கலாம்..

அறைக்குள் அடைத்துதான்
நாடுகாக்கச் சொல்கிறார்களே...
இன்று
காடு பார்ப்போம்... நடந்திருந்தார் கடவுள்..

அரைத்தலைச் சட்டையோடு
கழித்திருந்த மலத்தின் நிறம் எவ்வாறு என
யோசித்தபடியே நின்றிருந்தான்
அம்மணச் சிறுவன்.....

நான்கடி தள்ளி புழுக்கள்
பொங்கிக் கொண்டிருந்தாள்
ஆத்தா.. இடையில் பழுப்பாய்
வெந்ததை அரிசி என
விளக்கம் சொல்லியிருந்தாள் அவள்...

கடவுளுக்கோ.... வியப்பு..
நீர்சூழ்ந்த காடு அது... நிறமென்னவோ
கருப்பாய் நின்றிருந்தது...

கொசுக்கள் விளைவிப்பதாய்ச்
சொல்லி...சிரம பரிகாரங்களினூடே
காற்றில் கைதட்டிக் கொண்டிருந்தான்
இன்னும் ஒருவன்...!!

பிசுத்த ரத்தக்கறைப் பாவடைகளோடு
குப்பைகள் கிளறிக்
கொண்டிருந்தவள்...
யாரோ வீசியெறிந்திருந்த
நாப்கின்களை
கண்டுகொள்ளவில்லை... அவளுடைய தேடல்
குப்பி என்பதாகியிருந்தது...

கடவுள் குழம்பியிருந்தார்...
நாடுபோலத்தானே காடுமிருக்கிறது..
கைகால்கள் இன்னபிற
ஏனையதும்...அதுவாகவே....

இலத்தீனில் கேட்டிருந்த கடவுளுக்கு
கிரேக்கத்தில்
பதில் சொல்லியிருந்தான் ஒருவன்....

அதன் பெர்ஷியனாக்கம்
பின்வருமாறு....

பஹவான்... அங்கேயா போனேள்...?
அபச்சாரம்.. அவாள்லாம் சூத்திரா..
நம்மவாளப் பாக்கப் படாது.
லோஹங் காக்குற
பெரியவா நீங்க...!! உங்களுக்குத் தெரியாதா...?!!!
சாத்தான் இருப்பா அங்க...இருங்கோ..
ஜலம் ஊத்தறேன்..

நனைந்துகொண்டே
நிறக்காரணம் ஆய்ந்திருந்த
அவனைப் போலவே யோசித்திருந்தார்...


கடைசிவரை சாத்தானைப்
பார்க்கவில்லையே... அடுத்த கிரகணத்தின் போது
எப்படியும்..

முடிவெடுத்தவாறே அரிதாரத்திற்கு
முகம் நீட்டியிருந்தார்
கடவுள்......

எழுதியவர் : சரவணா n (7-Mar-15, 9:41 pm)
பார்வை : 95

மேலே