சட்டென எழுங்கள் - சரித்திரம் படைக்க
![](https://eluthu.com/images/loading.gif)
நம் அடிமை
விலங்கை என்றோ
அறுத்தெறிந்து
விட்டோம்...!!!
அடுப்பங்கரை
கதியென்பது மாற்றி,
ஆராய்ச்சி கூடம்
சென்றோம்...!!!
பாரதி கண்ட
கனவினை சொல்ல
புதுமைப்பதுமையாய்
புயலோடு
புறப்பட்டோம்...!!!
உரிமை உரிமை
என உரக்கச்சொல்லி
நமக்குண்டு
பங்கென்று நாமும்
பெற்றோம்...!!!
ஆனாலும்,
ஆணாதிக்க சதுப்புக்குள்
சிக்குண்ட மீன்
போல, மேல் வர
தவிக்கிறோம்...!!!
சுயநினைவிழந்த
வக்கிர பேய்களின்
சுழலில் சிக்கி
மடிகிறோம்...!!!
வக்கிர அரக்கர்களின்
வாழ்வினை வதம்
வரமாட்டான் இறைவன்
நிச்சயம்...!!!
இனி, சட்டமெனும்
சவுக்கெடுத்து
சாகும் வரை
அழ வேண்டாம்...!!!
வெறி கொண்ட
ஓநாய்களின்
ஓலத்தை நிறுத்திட...
அரிவாளை
எடுத்திடுவோம்...!!!
அவன் உறுப்பை
உருக்குலைத்து
பாவி அவன் திரும்பவும்
பாவிக்கும் எண்ணத்திற்கு
வைத்திடுவோம்
முற்றுப்புள்ளி.
சுட்டெரிக்கும் சூரியனாய்
சுழன்றடிக்கும் சுறாவளியாய்
ஆர்பரிக்கும் ஆழியாய்
அவதாரம் எடுத்திடுங்கள்
அநியாயம் தட்டிக்கேட்க...!!!
சமூகத்தின்
சாக்கடை பகுதியை
புறந்தள்ளி நீந்த
கற்றுக்கொள்ளுங்கள்...!!!
சட்டென எழுங்கள்
சரித்திரம் படைக்க
உங்களுக்கான
சாதனை கதவுகள்
தட்டப்படாமல்
இருக்கின்றன...!!!
**** மகளிர் தின வாழ்த்துக்கள்...சாதனைகள் பெருக...*****