பெருங் கோபம் உன்னை மன்னிக்கிறது

பெருங் கோபம்  உன்னை மன்னிக்கிறது

இதுக்கு அது மேல்
அதுக்கு இது மேல்
அலைபாயும் மனதுக்குள்
அற்பங்கள் குப்பைகள்...
காதல் ஒரு கேடு
கத்திரிக்கா கூட அழகு...
தான் என்பதுதான் கேவலம்..
நாம் என்பது ஊர்வலம்..
புதியவை கிடைக்கையில்
பழையவை நாறும்...
மஞ்சள் வெயில் மாட்டு சாணம்
மந்திரித்து திரிகிறது
பால்மயக்கம்...
எல்லாம் தெரியுமாம்...
எங்கே சொல்...
எங்கே.................
ஹ ஹஹா...
கழற்றி விடுதல் சுலபம்
செருப்புக்கு....
அலையாவது மேன்மை,
அலைவதுதான் உன்மை....
அடச் சீ -உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித் துளியும்
புதைக்கப் பட வேண்டியதே...
முட்டாள் மானினமே...
உனது வழக்கொழிந்த பழையதுவில்
என் மது - மேல்...
என் தத்துவ சுவடுகளின்
பாதங்களில்கூட
பட்டு விடக் கூடாத
தூசாக இருந்து விட்டு போ....
எனது பெருங் கோபம்
உன்னை மன்னிக்கிறது....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (8-Mar-15, 12:41 pm)
பார்வை : 269

மேலே