புரிதல்
சாவின் மடியில் சூரியன்
இலை உதிர்த்து புதிய
சொந்தங்களை ஏற்று கொள்ள
காத்திருக்கும் மரம்
இருவரின் கண் தொடும் தொலைவில்
காட்சி ஒன்றாகினாலும்
பார்வை தனிப்படும்
இலை விட்டுசென்ற காயங்களுக்கு பரிதவிப்பும்
இளந்தளிரை வருடும் அரவணைப்பும்
புரிதல்கள் வேறாகிறது
இடையே
உரையாடல் ஊசிமுனையாகின்
உறவுகள் உய்ப்பது எங்கே.