கள்ளக்கூத்தியார்

அலுவலக பணி முடித்து எப்போதும் இன்முகத்தோடு வீட்டிற்குள் நுழையும் கணவர் இன்று பெருத்த சோகத்துடன் நுழைவதை கண்டு ஏதோ சந்தேகித்து கணவனிடம் என்னங்க என்ன ஆச்சு என்று கேட்க..

இன்னும் 10 நாட்களில் எனக்கு பணியிடமாற்றம் வரப்போகுது என்றான் கணவன்.

அதை கேட்ட மனைவிக்கு என்னடா நாம் பணியிடமாற்றம் வாங்க சொன்னப்போ நம்ம கூட சண்டைக்கு வந்த மனசுனுக்கு ...உள் மனதில் கொண்ட மகிழ்ச்சியை சற்று வெளிப்படுத்தும் விதமாய் போலியான கலங்கத்துடன் என்ன திடீர்ன்னு, எந்த ஊருக்கு நம்ம மாவட்டத்திலா என்று கேட்க ?

அதெல்லாம் தெரியில ஏதோ மலையடிவாரப்பகுதியாம் என்று கூறிய கணவன் மேல் ஏதோ சந்தேகம் எழ?

கலக்கத்துடன் கணவன் தூங்கியபின் ஏதோ சூழ்ச்சமத்தை உணர்ந்த மனைவி இந்த தகவலை தனது அம்மாவிடம் தொலைபேசியில் கணவனின் நடத்தையில் சந்தேகத்துடன் கூற அம்மாவுக்கு சற்று குழப்பம் இருந்தாலும் தனது ஒரே மகள் நமது ஊர் அருகிலே வரப்போகிறாள் என்று ஆனந்தத்தை வெளிப்படுத்தினால்.

அடுத்த நாள் காலையில் பணிக்கு சென்ற கணவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை சந்தேகம் மனைவிக்கு வலுப்பெற தொலைபேசிக்கு தொடர்புகொண்டால் அனைத்து வைத்த சப்தம்.

கணவரின் அலுவலக நண்பரிடம் தொடர்புகொண்டு அண்ணே! எனது கணவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்ற பதட்டத்துடன் கைக்குழந்தை கதறலோடு பேசிய அவளுக்கு அதிர்ச்சி தகவல்

குடும்பத்தின் உன்னதங்களை புரிந்த அவனுக்கு எதையும் மறைக்க மனமில்லாமல் "நீ முதல் பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு சென்ற பின் உன் கணவன் எங்களது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணோடு கள்ளத்தொடர்பு இருப்பதை கூற குழந்தையோடு அவளும் கதற ..

இரும்மா ஆதங்கபடாத! அவர்கள் இருவரும் செல்பி எடுத்துக்கொண்ட படம் எங்கள் மேலதிகாரிக்கு ஆதாரத்துடன் கிடைக்க அதனால்தான் உன் புருசனக்கு பணியிடமாற்றம்" என்று கூறிவிட்டு எந்தங்கச்சிபோல் நீ உண்மையை சொல்லிவிட்டேன் இதை நான் சொன்னதா அவரிடம் சொல்லவேண்டாம் என்று கூறிய அலுவலக நண்பர் தொடர்பை துண்டித்தார்.

மனைவியோ கண்ணீரை துடைத்தவாறு நன்றி சொல்லி குழந்தையின் பசியை தீர்க்க பால் கொடுக்க முனைந்தால்.

மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை யாரிடம் போய் சொல்ல? ... சட்டென்று ஒரு முடிவெடுத்தல் கணவரின் மேலதிகாரியை பார்ப்பதற்கு

தாமதமாக வந்த கணவனிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் ஏங்க இவ்வளோ நேரம் குழந்தையை பாருங்க.. என்று எதிர்காலத்தை நறுக்கென்று உணர்த்திக்கொண்டே சமயலறைக்கு சென்று..


சாப்பாட்டோடு வந்த மனைவி கையில் ஒரு உப்பு பாத்திரமும் இது என்ன உப்பு தனியா என்று உள்மனதில் கேள்வி எழுப்பியவாறு உன்னதொடங்கிவிட்டான் ஏதோ மனைவி கேட்டதுபோல் இருந்ததாக நினைத்து என்னடி என்றதும் ஒன்றுமில்லை நாளை காலை பேசுவோம் என்று முந்தானையை தூக்கி முலைக்காம்போடு குழந்தையை அணைத்துக்கொண்டு முடங்கிவிட்டால்.

அடுத்த நாள் விடியற்காலை விறுவென்று வேலையெல்லாம் முடித்துவிட்டு அவசரமாய் புறப்பட்ட மனைவியை பார்த்து எங்கடி கெளம்புற என கேட்ட கணவனிடம் "இக்" ஏதும் வைக்காமல் உங்க அலுவலகத்துக்கு மேலதிகாரியை பார்க்கணும் அதான் கெளம்புறேன் என்றதும் அதிர்ச்சியில் பதட்டத்துடன் அங்கே என் வர அதல்லாம் தேவையில்லை என்று கூற மனைவி இல்லீங்க உங்க நண்பர்களையும், அதிகாரிகளையும் பார்த்து நன்றி சொல்லத்தான் .. என்றதும்

கணவனுக்கு இருந்தாலும் ஒரு பயம் மனைவி அங்கு வந்தால் உண்மை தெரிந்துவிடுமோ என்று பயந்து அங்கு வந்து யாரிடமும் வேறு எதையும் பேசக்கூடாது என்று வாய் மொழி உத்தரவு கேட்க மனைவி "எல்லாம் எனக்கு தெரியும்" என் கணவனை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்றுதும் மூன்று முடிச்சி போடும்போது பார்த்ததைவிட சற்று மூச்சு திணற பார்த்துவிட்டு குழந்தையோடு அலுவலகத்திற்கு பயணித்தனர்.


மேலதிகாரியின் அறை முன்பு குற்ற உணர்வோடு நின்ற கணவரிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கணத்த மனத்தோடு மேலதிகாரியின் உத்தரவோடு அறைக்குள் நுழைந்ததும் அய்யா வணக்கம் நான்... என்று அறிமுகபடுதியதோடு எல்லா தகவல்களையும் கேட்டறிந்தேன். இதற்க்கு முன்பு நானே பணியிடமாற்றம் கேட்க சொன்னேன் அதை ஏற்காத என் கணவருக்கு தாங்களே அதை கொடுத்துவிடீர்கள் என்று தன் கணவன் செய்த தவறுக்கு மன்னிப்பையும் கோரி விட்டு முடியாத என் மாமனார், மாமியார், அம்மா, முதல் குழந்தையோடு நான் இவர்களின் அண்டையில் வாழவும் என் கணவரும் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் அதை எங்கள் பகுதிக்கே கொடுங்கள் என்று முந்தியை மூக்கில் துடைத்தவாறு கைக்குழந்தையும் கதற வேண்டுகோளிட்ட அந்த பெண்ணின் உணர்வுகளை புரிந்து, நிலைகளை அறிந்து சரிம்மா, நான் எனது மேலதிகாரியிடம் பேசி உங்கள் பகுதிக்கே பணியிடமாற்றம் வாங்கி தர ஏற்பாடு செய்கிறேன் என்று வாய்மொழி உத்தரவு கொடுத்தவாறு அவரது பையில் இருக்கும் ஒரு பிஸ்கட் பக்கெட்டை எடுத்து குழந்தையின் கையில் கொடுத்து கொஞ்சியத்தை பார்த்த அந்த பெண்ணுக்கு என்னதான் அதிகாரியாய் இருந்தாலும் மனிதநேயமும், மாண்பும் இருப்பதை எண்ணி கண்ணீர் மல்க நன்றி கூறி வெளியேறினார்.

தவறு செய்தது தெரிந்தும் தனக்காக அதிகாரியின் முன் மண்டியிட்ட மனைவியிடம் அங்கேயே முதலில் தனது விழிகளால் மன்னிப்பு கோரி.. எதையுமே கண்ண்டுகொல்லாமல் அமர்ந்திருந்த கள்ளக்கூத்தியாரின் முகத்தில் காரிமுழிந்து விட்டு கட கட வென கடந்தான் ஒரு கையில் மனைவியோடும், ஒரு கையில் கைக்குழந்தையோடும் சொந்த மண்ணில் திருந்தி வாழ..

எழுதியவர் : பொய் வை - பூந்தளிரன் (8-Mar-15, 1:42 pm)
சேர்த்தது : poonthaliran
பார்வை : 264

மேலே