மகளிர் தின கவிதை

பெண்
எதிர்கால தலைமுறையை
ஆக்கும் சக்தி மட்டுமல்ல ....
எதையும் ஆக்கும் சக்தி !

பெண்ணே !
உன் கன்விழியிரண்டும்
விண்வெளியை நோட்டமிடவேண்டும்
அங்கே பெண்ணுரிமைப் பற்றி
கூட்டமிட வேண்டும் ...!

விளம்பரப் பொருளின்
போகப்பொருளாய்
உன்னைச் சுருக்கிக்கொள்ளாதே !

காற்றில்லா மண்டலத்தில்
நீந்திச்சென்ற
கல்பனா சாவ்லாவின்
சாதனைகளாய் - உன்
சிந்தனைச் சிறகுகளை
விரித்துக்கொள் ...!

அன்பிலும் பண்பிலும்
அறவொழுக்க நெறியிலும்
அழகிய தமிழின்
மெல்லினமாய் இரு ...

உன்னை எவரேனும்
அடிமைப்படுத்த நினைத்தால்
ஆங்காரத்தமிழின்
வல்லினமாய் அவர்களைச் சுடு !

பெண்ணின் தேக பலமதை
நிரூபிக்க
பிரசவ நொடிகள் போதும்
மனபலமதை நிரூபிக்க
கெலன் கெல்லரும் , கியூரி அம்மையும்
போதும் ...!

எவரிடமும் கேட்காதே
எடுத்துக்கொள்
உன் உரிமையை ...

எவ்வளவு
உயரம் செல்லினும்
ஒருபோதும்
உதாசீனம் செய்யாதே
உன் கடமையை ....

இடைவெளியில்லா
கடல் அலையாய்
இடைவிடாது போராடு
உனது சுதந்திரத்திற்காக ...

அறிவைமட்டும் ஆயுதமாக்கி
காரணம்
பெண் ஆயுதம் தூக்க
அழியும் யுகம் ஆதலால் ...!

எழுதியவர் : த.மலைமன்னன் (8-Mar-15, 2:15 pm)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 199

மேலே