கவிதை நிர்வாணம் -சந்தோஷ்
எதுவும் சரியாக இல்லை
எதையும் சரியாக விடுவதில்லை
சரிவதெல்லாம் சரியாக இருப்பதில்லை
சரிந்தவர்களும் சரியாக மாண்டதில்லை
சாதித்தவர்களும் சரிகளில் சரியாகவில்லை
அடச்சீ........!
நாடா......... இது......................................?
என்றால்....
நாட்டை விட்டு..விட்டார்கள்
”அடச்சீ “ யை எடுத்து நாறவிடுகிறார்கள்.
சொன்ன நோக்கத்தை விட்டு
சொல்லிய பொருளை நோகவிடுவதே
நக்கீரர்களின் நோக்கமோ...?
அங்கொரு பெண் மயில்
காமநாய்களிடம் சீரழிகிறாள்.
உற்று கவனித்து கண்டித்து
எழுதிடவா...வெண்பாவில்?
எழுதலாம்........... முடியாது என்பதல்ல.
பயன் என்ன ? நிலை என்ன ?
தளை தட்டுகிறது என்பீர்...
நாளைய சமூகத்தின் மீதான
கவலையே இல்லாமல்..!
அயோக்கியனை அழிக்கவேண்டுமெனில்
தேவைப்படுவது எது..?
பனிக்கட்டியில் நனைத்த சொற்களா ?
எரிமலையை உள்வாங்கும் எழுத்துகளா?
பட்டிமன்றம் நடத்திக்கொண்டே
தீர்ப்புகளை வழவழத்துக்கொண்டிருங்கள்.
இதோ... நான்
கவிதை நிர்வாணத்தில்
பேனாவை தூக்கியெறிந்து விட்டு.......
ஒரு சோதரியின் பிறப்புறுப்பில்
இந்தியச்சட்டங்களை தேடும்
அந்த காமக்கொடூரனின்
சுதந்திர முதுகில
ஒங்கி................குத்தி
இரத்தம் குடிக்க போகிறேன்......
என் கையிலிருக்கும் காத்திர
கடப்பாரையினாலே..!