உழைக்கும்மகளிர்தினம்
மனிதனின் மகத்துவம்
உழைப்பில் என்றால்
மகளிருக்கு மட்டும்
மறுக்கப்பட்டது ஏன்
மணி நேரங்கள் நீடிப்பு ஏன்
ஏனென்ற வினாக்கள்
விடை கண்ட நாள்
உழைக்கும் மகளிரின் விடுதலை நாள்
அனல் காற்று அடிக்கும் எண்ணம்
இதமான ஓய்வின்றி
ஈரமில்லா முதலாளித்துவ
உழைப்பு சுரண்டலில்
ஊக்கமாய் சிலர்
என்னதான் வழி என்று
ஏக்கமுற்று
குழப்பம் இல்லா மனதுடனே
ஒன்றுகூடி வென்று எடுத்த
ஓர் நாள் ! இந்நாள்
அமெரிக்காவில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில்
வெடித்த புரட்சி
அகிலமெங்கும் வரலாறாய்
மாறிப்போன
அற்புத நாள்
உழைப்பை உயர்த்தும் நாள்