வாழ்க பெண்ணியம்
ஒரு மனிதன்
கண்ணில்லாமல் கூட வாழலாம்
ஒரு பெண்ணின்
துணை இல்லாமல்
நிச்சயம் வாழ முடியாது
அன்று
ஆணுக்கு துணையாய் மட்டுமே
இருந்தவர்கள்
இன்று
ஆணுக்கு இணையாய்
எல்லாத் துறைகளிலும்
இருக்கிறார்கள்
சாதனை படைக்கிறார்கள்
மலர், மல்லிகா, செந்தாமரையென
பூவாக இருந்தாலும்
லைலா, நிஷா, மேடியென
புயலாக இருந்தாலும்
மென்மைக்கும்
வன்மைக்கும்
எடுத்துக்காட்டு பெண்களே
தாயாய், தாரமாய், தமக்கையாய்
தவப்புதல்வியாய்
இப்படி ஏதேனும்
ஒரு ரூபத்தில்
பெண்களின் பங்கு
எல்லை இல்லாதது
எண்ணில் அடங்காதது
விவசாயம் முதல் விண்வெளி வரை
பெண்கள் விடாத துறையுமில்லை
பெண்கள் தொடாத சாதனையுமில்லை
அன்று மகாகவி பாரதி கண்ட கனவு
இன்று நனவானது
வாழ்க பெண்ணியம் .
கவிஞர் - ஞானசித்தன்
95000 68743