அவளின்றி
அவளின்றி ...
கொஞ்சல் போறாமல்
கெஞ்ச வைத்து
கன்னம் நிறைப்பவள் ..
விளங்காத வினா வாகி நிற்பவள்
என் உயிர் கொண்டு விடை தருபவள் ..
கனம் என்று நானுரைத்தால்
கணம் பாராது கவளமிடுபவள் ..
தவறென்றால் முகம் திருப்புபவள்
இனம் கண்டு தான் இதழ் பிரிப்பவள் ..
விடை பெறும் போது
விழி கொண்டு வழி நிறைபவள் ..
ஆயிரம் வரிகள் எழுதலாம் ஜாலியாக
ஆனால் ..
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அவளது
வார்த்தையான "ஜாக்கிரதை" போல வாராது ..
உலகம் அறிய வைத்தவள்
உலகம் புரியும் போது
விரல் கொண்டு இணைந்திருப்பவள் ..
அவளின்றி என் அணுக்களும் இல்லை
என் அகிலமும் இல்லை ..