இன்னொரு முறை

பணி முடித்து
பசியுடன்
அறை திரும்புகையில்
தன் பேத்திக்கு
சோறு ஊட்டிக்கொண்டிருக்கும்
கீழ் வீட்டு அம்மா
" சாப்பிடுப்பா " என்று
அடிவயிற்றில் இருந்து
சொல்லும் போது
ஒரு தாய்மை
என்னை
இன்னொரு முறை
பிரசவிக்கிறது !

எழுதியவர் : குருச்சந்திரன் (9-Mar-15, 6:40 am)
Tanglish : innoru murai
பார்வை : 258

சிறந்த கவிதைகள்

மேலே