உறங்கடி கண்ணே

வெல்வெட் மெத்தையில்
ஊதாப்பூ ஒன்று உறங்குது!
உறங்கடி கண்ணே!
உறக்கம் உனக்கு வர
உன் தாய் எத்தனை நேரம் பாடினாளோ..?
ஓயாமல் அவள் உழைக்க
அவசரமாய் எழுந்து
அழுது விடாதே!
பாவம் அவள்!
எத்தனை வேலைகளுக்கு நடுவில்
உன்னை உறங்கவைக்க பாடுபட்டிருப்பாள்!
ஒரு வாய் உண்ணவும்,
தலைவாரிப் பூச்சூடவும்
நேரமில்லாது
உன்னை கவனிக்கிறாள்!
அயர்ந்து தூங்க ,சிறு
அதிர்வு கூட உன்னை
அணுகாமல்
அங்கலாய்த்திருப்பாள்!
உறங்கடி கண்ணே!
விழித்து விடாதே!