இரத்த தானம்

***கும்பலாய்
படையெடுத்து***
***நால்புறமும்
நடைஎடுத்து***
***வரும்போதே
இசைதொடுத்து***
***பரிசோதனை
முறை ஒழித்து***
***வயது வித்யாசம்
ஒன்றிணைத்து***
***அனுமதியும்
தானெடுத்து ***
***இனிதாய்
இரத்த தா(பா)னத்தை
பெற்று சென்றன
கொசுக்கள்***
****************************
உயர் சாதியும்
தாழ் சாதியும்
ஒன்றிணைந்தன
கொசு பெற்ற
இரத்த தா(பா)னம்!