முட்டாள்
கையில் கிடைத்த
வைரக்கல்லை
குப்பையில்
போட்டுவிட்டு,
நகைக்கடையின்
அலங்கார கூண்டில் உள்ள
வைர நகையை
வேடிக்கைப் பார்க்கிறான்!
முட்டாள் எப்போதும்
பொருளோ,மனிதரோ
உண்மையான மதிப்பை
உணருவதில்லை!
அதை
உதாசீனப்படுத்திவிட்டு,
அதன் பின்னால்
அதன் தேவையின் ஆட்பட்டு,
வேண்டித்திரிவான்!
உயிரற்ற பொருளுக்கு
உன் உதாசீனம்
வருத்தமில்லை!
உயிருள்ள ஜீவனை
உதாசீனம் செய்தால்
உனக்காக ,
உன் தேவைக்காக,
விருப்பம் தேடினால்
வெறுமை தான் மிஞ்சும்!