வாடகைத்தாய்

தனம் ரொம்ப சந்தோசமாக இருந்தாள் குழந்தை நல்லபடியா பிறந்ததில எல்லோருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி …இருக்காதா பின்ன யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் அதுவும் இந்த வயசுல யாருமே செய்ய தயங்குகிற ஒன்றை அவள் செய்கிறாள் என்றால் ..அது என்ன லேசுப் பட்ட காரியமா .

``அம்மா''... மகள் சுசீலா பக்கத்தில் வந்து நின்றாள் …’
``இந்தாம்மா இந்த பாலைக்குடி ''..
``பாப்பா என்ன பன்றா .''....
. `தூங்கிறாள் ''….
.பாலைக் குடித்துக் கொண்டே தனம் நடந்தவைகளை அசை போட்டாள்

.எந்த வயிற்றிலே மகளை சுமந்தாளோ அதே வயிற்றில் பேத்தியையும் சுமக்க வேண்டி வருமென்று அவள் நினைத்தே பார்த்திருக்க மாட்டாள் …நல்ல வேளை குழந்தை ஆரோக்கியமா பிறந்தது ….ஏங்கிகிட்டு கிடந்த அவள் மகள் சுசீலாவுக்கு அது ஒரு பெரிய பாக்கியம் …..
சுசீலாவுக்கு கல்யாணம் ஆகி அவள் முழுகாம இருக்கிறாள் என்ற போது பேரனோ பேத்தியோ வருகிற சந்தோசத்தில மனசு ரக்கை கட்டிப் பறந்தது .மகளை கூடவே இருந்து நல்ல கவனிச்சுட்டுதான் வந்தாள் …மாசாமாசம் ஆஸ்பத்திரிக்கு போய் பரிசோதனை எல்லாம் நல்லாத்தான் பார்த்தாள் ....எல்லா நம்பிக்கையும் அடியோடு மண்ணாகிப் போய் பெரிய இடி தலையில விழுந்தது . ஏழாவது மாதத்தில நஞ்சு பிரிந்து அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு .நிலைமை விபரீதமாப் போச்சுது .சுசீலாவுக்கு அறுவை சிகிட்சை செய்து இறந்து போன குழந்தையை வெளியே எடுத்தாங்க ..ரத்தப்போக்கு நிற்காததால் அவளுடைய கர்ப்பப் பையையும் எடுக்க வேண்டியதாயிற்று .அவளுடைய உயிரைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை …..

இரண்டு வருடம் கடந்தது ..சுசீலாவுக்கு ஒரே ஏக்கம் ..சின்ன குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் அழ ஆரம்பிச்சுடுவ … மகளின் வேதனைப் பார்த்து தனம் ரொம்ப கஷ்டப்படுவா..அடிக்கடி ஆசுபத்ரிக்கு போய் மகளும் அவள் கணவனும் ஆலோசனை பெற்றுக்கிட்டே இருக்கிறப்ப எல்லாம் தனமும் கூடவே போவாள்...அப்பத்தான் ஒருநாள் டாக்டர் சுசீலாகிட்ட சொன்னார் ``உங்களால் பிள்ளை பெற முடியாவிட்டாலும் உங்களால் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் .அதற்கு ஒரு வாடகைத்தாய் கிடைப்பாங்களா …உங்கள் உறவினர்களுக்குள்ளே இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ''

மகளின் வேதனை பார்த்து வந்த தனம் வாடகைத் தாயை இருக்க சம்மதம் தெரிவிச்சாள் .இதுக்காகவே 5 வருசத்துக்கு முன்னால் நின்று போன மாதவிலக்கை வரவழைத்து நல்லா தொடர்ச்சியா டாக்டர்கள் பரிசோதனைகள் /ஆலோசனைகள் பேர்ல சிகிச்சைகள் தனம் எடுத்துக் கொண்ட சிரமத்தை சுசீலா மறக்கவே மாட்டாள் ....ஒரு கட்டத்தில் அம்மாவின் கஷ்டம் பார்த்து வேண்டாமென்று கூட சொன்னாள் .ஆனால் தனம் அதில் விடாப்பிடியாக இருந்து கருவைத் தாங்க தயாரானாள்..நினைக்கவே எல்லாமே அதிசயமாய் இருந்தது .

அப்புறம் ஒருநல்ல நாளில மகளுடைய கருமுட்டையையும் மருமகனுடைய விந்தணுக்களையும் சேர்த்து அது என்னவோ ``icsi’ முறையில் கரு உருவாக்கி அதை தனத்தின் கருப்பையில் செலுத்தப்பட்டு பராமரிக்கப் பட்டது .போனமாசம் தான் ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுத்தாங்க..பொம்பள பிள்ளை ..அழகா சிவப்பா இருக்குது. மகளைப் பெற்ற வயிறு பேத்தியையும் சுமந்த ரெட்டிப்பு சந்தோசம் தனத்துக்கு .....

பாலைக் குடித்துவிட்டு காலி தம்ளரை படுக்கைக்கு பக்கத்தில் வைத்தாள் ..
குழந்தை அழும் சத்தம் கேட்டது
`` பாப்பா அழுறாம்மா '' சுசீலா அங்கிருந்தே சொன்னாள்
``குழந்தையைத் தூக்கிட்டு வாம்மா …. பசியில அழுகிறாள்.. பால் கொடுக்கணும் .''
படுக்கையில் வசதியாக எழுந்து அமர்ந்து பேத்திக்கு பால் கொடுக்க சட்டையின் பொத்தான்களைத் தளர்த்தி தயாராக இருந்தாள் பாட்டிஎன்ற தாய் ..பாசக்கார வாடகைத் தாய் .…

எழுதியவர் : சுசீந்திரன் . (9-Mar-15, 5:15 pm)
Tanglish : vaadakaitthaai
பார்வை : 381

மேலே