நீலக்குயில் தேசம்27---ப்ரியா

தன் அத்தை மகள் கயலை சந்தித்து பேச நினைத்த மதன் அதற்குமுன் தன் தங்கையிடம் பேசிப்பார்க்கலாம் என அவளுக்கு அழைப்பைக்கொடுத்தான்......சிறிது நேர உரையாடலுக்குப்பின் கயல்விளியைப்பற்றிய பேச்சை தொடங்கினான்.......

அண்ணனது இன்றைய பேச்சு வழக்கத்தை விடவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே என்பதை அவன் பேச்சிலேயே உணர்ந்து கொண்டாள் ப்ரியதர்ஷினி.

என்னதான் சொல்றான் பார்ப்போம் என கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு அவனது தயக்கமான பேச்சு.....அந்த நிறுத்தம், யோசனை, பதற்றம் என அனைத்தையும் வைத்து கயலை காதலிக்கிறானோ என சந்தேகம் வந்தது.

கயலுக்கு காதல் உண்டா? என்ற அவனது அடுத்த இந்த கேள்வியை வைத்து அதை உறுதிபடுத்திக்கொண்டாள்.
என்ன அண்ணா என்று வேணுமென்றே மறுமுறையும் கேட்டாள் தயங்கி தயங்கி சொன்னவனின் வார்த்தையை வைத்து விஷயத்தை புரிந்து
கொண்டவள்........ஆம் என்று நிதானமாய் பதிலளித்தாள்.

ஏய்! எ.......ய்........என்ன சொல்றா உண்மையாவா?என்று பதற்றத்துடன் இவன் கேட்க? மறுமுனையில் தன்னையும் மீறி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்தாள் ப்ரியா..............!

ஆமா அண்ணா என் இப்படி தடுமாறுற ஏதாவது பிரச்சனையா என்று அவனை கலாய்த்துக்கொண்டிருந்தாள் அவள்.......அவனது பொறுமையை இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என நினைத்த தங்கை.....இல்லை அண்ணா கயல்விழி யாரையும் காதலிப்பதாக தெரியவில்லை தைரியமாக காதலை சொல்லலாம் வேணும்னா நானே சொல்லட்டுமா?என்று கேட்ட தங்கையிடம் வேண்டாம் அவசரப்பட வேண்டாம் அம்மாக்கிட்ட எதையும் சொல்லிராத நான் கயல்விழியை பார்த்தேன் அவளிடம் பேசத்தான் போறேன் அதற்குமுன் சும்மா உன்கிட்ட பேசி மனச ரிலேக்ஸ் பண்ணிக்கலாம்னு தான் பேசினேன் வைக்கட்டுமா?என்று கேட்டுக்கொண்டே இவள் பதிலையும் எதிர்பார்க்காமல் அழைப்பைத்துண்டித்தான் மதன்.......அடப்பாவி அதற்குள்ளால கயல பார்த்துட்டியா எல்லாம் காதல் படுத்தும் பாடு என மனதில் நினைத்தவள் தன் 5-ம் வகுப்பு பள்ளிக்காதலனை மனதில் ஒருமுறை நினைத்துக்கொண்டு ஏக்கமாய் ஒரு பெருமூச்சுவிட்டாள்.

இந்த காதலர்கள் எல்லாரையும் கடவுள் சேர்த்து வைக்குறாரே நம்மை மட்டும் என் பிரித்து வைத்து விளையாடி பார்க்கிறார் என்று மனதிற்குள் கடவுளை கோவித்துக்கொண்டாள் ப்ரியதர்ஷினி.........

தன் ஆசை அத்த மகள் கயல்விழியை பார்க்க அவளுக்கு பிடித்தமான கருப்பு வெள்ளை உடையை அணிந்து கொண்டு அவளை பார்க்க சென்றான் கல்லூரி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்கள் வெகுநேரமாகியும் அவளை காணாததால் மனவேதனையுடன் சோர்வாய் நின்றான் அவன்......பொறுமையிழந்த நண்பர்கள் அங்கு வந்த ஒருவனிடம் விசாரித்தனர் அதன் பிறகுதான் மூன்றாமாண்டு மாணவர்கள் அனைவரும் சுற்றுலாவிற்கு சென்றிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தது முதல் முதலாக எடுத்த முயற்சி வீணானதை நினைத்து மிக கவலையடைந்தான் மதன்.

ஏமாற்றம் தன் நண்பன் முகத்தில் தெரிந்ததை பார்த்த நண்பர்கள் ஆதரவுடன் பேசினார்கள்..நீ நிம்மதியாக வேலைக்கு செல் நாங்கள் பேசிக்கலாம் அவள் வந்ததும் அவக்கிட்ட பேசி உன் காதலுக்கு முழு உதவியும் நாங்க பண்றோம் என்று நண்பர்கள் அவனை தேற்றினர்..........வேண்டாம்டா நீங்கள் எதுவும் பேசவேணாம் அடுத்த லீவுக்கு நான் இங்க வரேன் அப்போ பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர் அனைவரும்.

மதன் மனதை தேற்றிய நண்பர்கள் புது இடத்துபணிக்கு செல்வதற்கு தயாராக்கி அவனை அனுப்பி வைத்தனர்........மதன் புது ஊரை நோக்கி பயணமானான்........

_____________________________________________________________________________________________________________________________

இன்னொரு பக்கம்.......சுற்றுலா சென்ற மாணவர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்......வண்டி நிறுத்தும் இடங்களில் எல்லாம் காதல் ஜோடிகள் பேசியும் ஒருவரையொருவர் அக்கறையோடு கவனித்தும் கொண்டனர் தோழிகள் கிண்டலடித்தல் என அந்த பயணங்கள் அழகாய் அமைந்தது அந்த அழகிய மாலைநேரத்து மயக்கத்தில் அனைவருமே இயற்கையின் அழகை ரசித்து ரசித்து மயங்கியே போனார்கள்....
இரவு நேரம் மைசூரில் போய் இறங்கினார்கள் தங்குவதற்கு தேவையான இடங்களை தேர்வு செய்து அன்றைய இரவு சாப்பாட்டை முடித்து ரெஸ்ட் எடுத்துவிட்டு காலையில் இடங்களை சுற்றிப்பார்க்க கிளம்பிவிடலாம் என முடிவு செய்தனர்.

அதன்படி அன்றைய இரவுச்சாட்டை பக்கத்திலிருந்த தங்களுக்கு பிடித்த ஹோட்டல்களிலேயே முடித்துவிட்டனர்.

அனைவரையும்.....வழிநடத்தும் முதன்மை உடற்கல்வி பேராசிரியர் மற்றும் அவரது துணை இருவரும் அனைத்து மாணவர்களையும் அழைத்து அடுத்த நாள் காலை முதல் இரவு வரை உள்ள திட்டங்கள் மற்றும் சில அறிவுரைகளையும் தெளிவாக விளக்கினார்,

மாணவர்களுக்கு தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் சில அறிவுரைகளை கூறிவிட்டு அவரவர் அறைக்கு அனுப்பிவிட்டு மிகவும் கவனமாக நடந்து கொண்டார்கள் அவர்கள்.

மாணவர்களும் மாணவிகளும் பொறுப்போடு அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தனர்......ஒரு அறைக்கு 10 மாணவிகளும் 1 ஆசிரியையும் என தங்கினர்.........மாணவர்களுக்கும் இதே தான் இரவில் 11மணிக்கு மேல் யாரும் விழித்திருக்கக்கூடாது என்றும் காலையில் 6மணிக்குமேல் யாரும் தூங்கக்கூடாது என்றும்........மாணவ மாணவிகள் அளவுக்கு மீறி நடந்துகொள்ளுதல் கூடாது என்று சில கட்டுபாடுகள் வைத்திருந்தனர்........விதிமுறைகளை யாரும் மீறக்கூடாது அவ்வாறு மீறினால் நடவடிக்கை எடுப்போம் என்றும் அறிவுறுத்தினர் அனைத்தையுமே அனைவரும் ஏற்றுக்கொண்டனர்........!

தோழிகள் ஒரே அறை ஒரே படுக்கையில் படுத்து பேசிக்கொண்டிருந்தனர்....என்னதான் இருந்தாலும் தன் உயிர்த்தோழிகளிடம் சாமியார் சொன்ன விஷயங்களை மறைத்தது தவறாகும் என நினைத்த கயல்விழி அந்த விஷயங்கள் அனைத்தையும் தன் தோழிகளுக்கும் சொன்னாள்.......இந்நேரம் தோழிகளுக்கு சிறு தயக்கம் என்னதான் மூடநம்பிக்கை என்று சொல்லி தவிர்த்தாலும் இவர்கள் மூவருமே இந்து மதத்தை சார்ந்தவர்கள் தான் அதனால் இப்போது கொஞ்சம் கயல் விஷயத்தில் அவர்களுக்கும் பயம் ஏற்பட்டது சாமியார் சொல்லக்கூடாது என்று சொல்லியும் இவள் நடந்த சம்பவங்களை வெளியில் சொல்லிவிட்டாளே இதனால் இவளுக்கு ஏதாவது ஆகுமா?என்ற பயம் தொற்றிக்கொண்டது ஆனால் அவர்கள் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இதெல்லாம் சும்மாடி அத நினச்சி நீ மனச குழப்பிக்காத என்று அவளை தேற்றினார்கள்.......

கயல் மனது முழுவதும் நீலக்குயில்தேசமே பரவியிருந்தது........அங்கு வைத்து தன் காதலை காதலன் ராகேஷிடம் சொல்வது அவளுக்கு ஏதோ ஒரு பெரிய சாதனை மாதிரி இருந்தது அந்த நாளை எண்ணியே இருந்தாள் கயல்.

திடீரென கயலின் அறையில் தங்கியிருந்த மாணவிகளில் ஒருத்திக்கு இருமலும் மூச்சு வாங்கலுமாக இருந்தது தான் கொண்டு வந்த மருந்து மாத்திரைகள் இன்னொரு அறையிலிருக்கும் தோழியிடம் இருப்பதாக கூறியதால்.......இரண்டு மாணவிகள் அந்த அறையை நோக்கி ஓடினர் அதில் கயலின் தோழி ஷீபாவும் உண்டு.

அந்த அறைக்கு சென்று அவளிடமிருந்து மருந்து வாங்கிக்கொண்டு இவர்கள் அறையை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது பக்கத்திலிருந்த ஆண்கள் அறையிலிருந்து கயல்விழி என்று வந்த அந்த பேச்சைக்கேட்டதும் அப்படியே தடுமாறி நிலைகுலைந்து நின்றாள் ஷீபா????

எழுதியவர் : ப்ரியா (10-Mar-15, 12:19 pm)
பார்வை : 322

மேலே