ஏன் எதற்கு அங்கிகாரம் அற்ற மகளிர் தினம்

ஏன் எதற்கு அங்கீகாரம் அற்ற மகளிர் தினம் - கயல்விழி

மகளிர் தினமாம் வருடத்தில் ஒருநாள்
மற்றைய நாட்களில் மறுக்கப் பட்டதாம் உரிமைகள் .

வாழ்த்துக்கள் வார்த்தைகளில் .
வர்ணிப்புகள் கவிதைகளில்
வஞ்சக புகழ்ச்சி இதழ்களில்
வாழ வேண்டுமாம் பூமிதனில் .

மலர் என்பார் பெண்ணை -பின்
பறித்தெடுத்து கசக்கிடுவார் காரணம் எதுவென்றால்
கடதாசி பூ என்பார்.

கட்டிய தாலிக்கு தொட்டிலில் பிள்ளை
கொண்டவள் முடிய கண்டவளோடு
சுகம் தேடல் .

அடுக்களையில் பொசுங்கும் அன்னையும்
அழுக்கு துணி கழுவும்
மனைவியும்

அன்பை பொழியும் தங்கையும்
அணைத்துக் கொள்ளும் மகளும்
பெண் இல்லையாம்
அடுத்த வீட்டு அன்னக்கொடிக்கு
வாழ்த்து மடலோடு வாசலில் .

ஆஹா ஆஹா


என்ன சொல்வோம் எமக்கான
தினத்தை .
ஏற்றுக்கொள்கின்றோம் எவரோ ஒருவரின் வாழ்த்தை
எமக்கான அங்கிகாரம் எம் வீட்டில்
கிடைக்கும் வரை ..

எழுதியவர் : கயல்விழி. (9-Mar-15, 6:13 pm)
பார்வை : 138

மேலே