அவனும் நானும்

சில்லென்று கொட்டிய
அருவி கீழ் நின்று குளித்து
புது சுகம் கண்டேன் நான்.

குளியல் அறைதனில்
கொட்டிய நீரில்
குளித்து சிலிர்த்தான் அவன்.

பாம்பாய் ஓடிய பாதையல் ஓடிய
மாட்டு வண்டியை கண்டு
மகிழ்ச்சி கொண்டேன் நான்.

இறைந்து ஓடிய
ரயில் வண்டியை
பார்த்து மலைத்தான் அவன்.

பச்சை புல்லில்
படுத்து எழுந்து
பரவச பட்டேன் நான்.

பஞ்சு மெத்தை
படுக்கை பார்த்து
படுத்து கிடந்தான் அவன்.

இக்கரைக்கு அக்கறை
பச்சைதானோ?

எழுதியவர் : sujatha (9-Mar-15, 5:30 pm)
Tanglish : avanum naanum
பார்வை : 71

மேலே