தமிழில் பிழையின்றி எழுதிட 02-திரு அகன்

படைப்பாளிகளின் கவனத்திற்கு - பிழையின்றி எழுதிட.....

தோழமைகளுக்கு வணக்கம் நமது தளத்தில் பெரியவர் ஐயா கன்னியப்பன் அவர்கள் பிழை நீக்கி எழுத வேண்டும் என்பதில் படைப்பாளிகளுக்குள்ள பொறுப்பை சுட்டிக்காட்டி அருமையான படைப்பை கொடுத்தார்.

பல நூல்கள் படைத்திருந்தாலும் ஆசிரியர்கள் அளித்த பயிற்சியை பள்ளி நாட்களில் கைக் கொள்ளாமல் ஆங்கில மோகத்தில் உழன்று திளைத்ததின் விளைவாக இன்னமும் ஒற்று எனக்கு ஒத்துப்போகவில்லை.....!!! அன்றியும் வல்லினம், மெல்லினம் இடையில் சிக்கல் ஏதும் இருப்பதில்லை.

முழுமையான இலக்கணத்தைச் சுவைபட பயிற்றுவிக்கும் ஆற்றல் மிக்க ஆசிரியர்கள் கல்லூரி நிலைகளில் இல்லை என்பது கவலையளிக்கும் செய்தி.

இருப்பினும் ஆற்றல் மிக்க அனுபவம் செரிந்த ஐயா கன்னியப்பனார் போன்றோர் உதவிக்கரம் நீட்டுவதை நாம் இறுக பற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வகையில் தினமணி னி நாளேட்டில் அண்மையில் வெளியான “மயங்கொலிச் சொற்கள் ண, ன பொருள் வேறுபாடு” குறித்த பட்டியல் பகுதி ஏழில் வெளியிடப்பட்டது. கவிதை படைக்கும் படைப்பாளிகள் எதுகை மோனையை கைக்கொள்ளும் போது ''ண மற்றும்' ன 'ஆகியவற்றுள் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது .
இப்பட்டியல் பயன்பாட்டிற்காக அளிக்கப்படுகிறது.
பட்டியல் உடனே தோழர் சிவபாலனால் பயன்படுத்தப்பட்டது மகிழ்வை அளிக்கிறது...


கிணி ­ கைத்தாளம்
கினி ­ பீடை

கிண்ணம் ­ வட்டில், கிண்ணி
கின்னம் ­ கிளை, துன்பம்

குணி ­ வில், ஊமை
குனி ­ குனிதல், வளை

குணித்தல் ­ மதித்தல், எண்ணுதல்
குனித்தல் ­ வளைதல்

குணிப்பு ­ அளவு, ஆராய்ச்சி
குனிப்பு ­ வளைப்பு, ஆடல்

கேணம் ­ செழிப்பு, மிகுதி
கேனம் ­ பைத்தியம், பித்து

கேணி ­ கிணறு
கேனி ­ பித்துப்பிடித்தவர்

கோண் ­ கோணல், மாறுபாடு
கோன் ­ அரசன்

சாணம் ­ சாணைக்கல், சாணி
சானம் ­ அம்மி, பெருங்காயம்

சுணை ­ கூர்மை, கரணை
சுனை ­ நீரூற்று

சுண்ணம் ­ வாசனைப் பொடி
சுன்னம் ­ சுண்ணாம்பு, பூஜ்ஜியம்

சேணம் ­ மெத்தை
சேனம் ­ பருந்து

சேணை ­ அறிவு
சேனை ­ படை

சோணம் ­ பொன், சிவப்பு, தீ, சோணகிரி
சோனம் ­ மேகம்

சோணை ­ ஒரு நதி, சேரன் மனைவி
சோனை ­ மழைச்சாரல், மேகம்

கணகம்-ஒரு படைப்பிரிவு
கனகம்-பொன்

கணப்பு-குளிர் காயும் தீ
கனப்பு-பாரம்,அழுத்தம்

கணி-கணித்தல்
கனி-பழம்,சுரங்கம்

கணம் -கூட்டம்
கனம்-பாரம்

கண்ணன் -கிருஷ்ணன்
கன்னன்-கர்ணன்

கண்ணி-மாலை,கயிறு,தாம்பு
கன்னி-குமரி,ராசி,

கணை-அம்பு
கனை-ஒழி,கனைத்தல்

கண்-விழி
கன்-கல்,செம்பு,உறுதி

கண்று--அம்பு
கன்று-அற்பம்,இளமரம் ,குட்டி

கண்ணல்-கருதல்
கன்னல்-கரும்பு

காண்- பார்
கான்-காடு,வளம்

கானம்-இசை,காடு,வளம்,தேர்
காணம்-பொன்,கொள்

காணல்-பார்த்தல்
கானல்-பாலை

மீண்டும் ச(சி)ந்திப்போம்
அன்புடன் அகன்

இவை நமக்கு நமதுப் படைப்புகளை எப்போதும் பிழையற அளித்திட உதவும் அல்லவா...???

---------- படைப்பு அளித்தவர் திரு. அகன்

பின் குறிப்பு: இது திரு அகன் அவர்கள் படைப்பு.

(இங்கு கருத்திட இயலாது )

எழுதியவர் : திரு அகன் (9-Mar-15, 7:12 pm)
பார்வை : 266

மேலே