இந்தியாவின் மகள்- ஒர் அலசல் -சந்தோஷ்

இந்த கட்டுரையை எழுதலாமா வேண்டாமா ? இரண்டு நாட்களாக தீவிர உள்மன ஆலோசனைக்கு பிறகே இதை எழுதுகிறேன்.. பி.பி.சி தயாரித்த ஆவணப்படம் இந்தியாவில் வன்கொடுமை நிலையினை எடுத்துரைப்பதாக இருந்தாலும்.. அதன் பிண்ணனியிலுள்ள நுட்பமான அரசியலையும் கவனிக்க தவறி உணர்ச்சி வயப்பட்டு ,அவசர கதியில் பொறுப்பற்ற முறையில் எதையும் எழுதிவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கை சிந்தனையே இந்த தடுமாற்றத்திற்கு காரணம்.

-- டிசம்பர் 16- 2012 இரவு இந்திய பெண்கள் சுதந்திர விடயத்தில் பெரிய கரும்புள்ளி தடவப்பட்டுகொண்டிருந்த கொடுமையான விசயம் வெளிச்சத்திற்கு வந்தது . நீதிபதியாக வேண்டும் என்கிற தனது தந்தையின் கனவை மறுத்து.. நீதிபதியை விட மருத்துவர் பணியே உயர்ந்தது எனும் இலட்சியத்தில் மருத்துவம் படித்த 23 வயதுடைய இளம்பெண், ஊடகத்தினரால் பெயரிடப்பட்ட நிர்பயா என்கிற ஜோதிசிங் .அந்த கருப்புத்தினத்தின் இரவு நேரத்தில் தனது ஆண் தோழருடன் ஒரு பேருந்தில் ஏறியிருக்கிறாள். அந்த பேருந்து ஒட்டுநர் உடபட மிக மிக கொடுமையான அரக்க கும்பலால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்பு.. ஒடும் பேருந்திலிருந்து அவளும் அவளின் தோழனும் தூக்கி வீசப்பட்டார்கள்.

பேருந்தில் நடந்தது பலாத்காரம் மட்டுமல்ல.. ஒரு பெண்ணை எந்தளவிற்கு சீரழிக்க முடியுமோ .. எந்தளவிற்கு வன்முறையாக புணரமுடியுமோ என்பதையும் தாண்டி... அந்த மிருகங்களால் செய்யப்பட்ட உச்சக்கட்ட கொடூரம்.. இதுவரை எந்த பலாத்கார வன்கொடுமையிலும் நடக்காத ஒன்று அல்லது இதுவரை வெளி உலகிறகு தெரியாத ஒன்று.
நிர்பயாவின் பிறப்புறுப்பு வழியே அவளின் குடலை உருவும் அளவிற்கு மிக கொடுமையான வன்கொடுமையினை செய்து இருக்கிறது அந்த வெறிப்பிடித்த மிருககும்பல். இந்த செயல் எந்த அளவிற்கு கொடூரமானது. எந்த அளவு அந்த இளம்பெண் துடிதுடித்திருப்பாள் என்பது மருத்துவம் அல்லது மனித உடலியியல் அமைப்பை அறிந்தவர்களுக்கு தெரியும். சற்று அந்த நிலையை சிந்தித்து பார்த்தாலே நமக்கு மனநிலை பாதிக்ககூடும்.

இறுதியில் பேருந்தில் தூக்கிவீசப்பட்ட உயிருக்கு போராடியவளை .பாதுகாப்பு பணியிலிருந்த ஒரு காவலரால் காப்பாற்றப்பட்டு.. டெல்லி மருத்துவமனையில் காப்பாற்ற இயலாமல் சிங்கப்பூர் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டும் இறுதியில் மரணத்தை தழுவினாள் நம் தாய நாட்டின் நாளைய பெண் மருத்துவர் நிர்பயா எனும் ஜோதிசிங், மாண்டது வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு மாணவி மட்டுமல்ல, இந்திய பெண் சுதந்திரத்தின் மாண்பு, இந்திய அரசியல் சட்டங்களின் வீரியம், இந்திய ஆண் மகன்களின் மீதான நல்லெண்ண பார்வை.

.. இந்த கொடும் நிகழ்வையடுத்து வன்கொடுமையில் சம்மந்தப்பட்ட மிருகங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும். வன்கொடுமையின் பிண்ணனியை ஆவணப்படமாக தயாரித்த பி.பி.சி ஊடக நிறுவனத்தின் செயலையும். இந்த ஆவணப்படத்தினால் இந்திய அரசாங்கத்தின் மீது வீசப்படும் நுண்ணிய அரசியலும். இந்த ஆவணப்படத்தில் குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டியும்... அந்த பேட்டி எடுக்கப்பட அனுமதித்த விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் அவலட்சணத்தையும், பின்பு ஆவணப்படத்தை தடைசெய்த இந்தியாவின் ராஜதந்திர (?) நடவடிக்கையும் பிண்ணனி குறித்தும், இதற்கும் மேலாக கிழட்டுத்தனமான நமது இந்திய அரசாங்கச் சட்டங்களை மாற்ற வேண்டிய அவசியத்தையும் அலசப்போகிறது இந்த கட்டுரை.


( தொடரும் )

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (9-Mar-15, 7:50 pm)
பார்வை : 165

சிறந்த கட்டுரைகள்

மேலே