என் தனிமை நேரங்கள்
தனிமை
என்னை காட்டும் கண்ணாடி
தனிமையில் என்னை படிக்கிறேன்
கொஞ்சம் நேசிக்கிறேன்
தனிமை தேடினால்
வீட்டு மொட்டை மாடி தவிர
வேறு இடம் நிகராகாது
மனதில் உள்ள சோகங்களை
கொஞ்சம் இயற்கை நண்பர்களிடம்
கொட்டி திறக்க...
முகத்தில் சறுக்கி விளையாடும்
கண்ணிற் துளிகளோடு ஒரு நாள்
இன்னொரு நாள்
வானத்தை ரசித்து
அதற்கு கவிதை சொல்லி கொண்டு இருப்பேன்
தனிமையில் சொர்க்கம் நரகமாயி தோன்றும்
நரகம் சொர்க்கமாயி தோன்றும்
குறுகி கிடக்கும் மனது
தனிமையில் வனமாய் மாறும்
மனதில் மகிழ்ச்சி பூக்கள் பூக்கும்
கற்கள் கவி பாடும்
காயங்கள் காவியம் பாடும்
என் தோளில் என்னை
சாய்ந்து கொள்ள வைக்கும்
சில வார்த்தைகளின் வல்லமை
புரிய வைக்கும் ஒரு விரிவுரையாளன்
கடந்த கால இதய சுவடுகளை
படமாக்கி ஓட்டும் நல்ல டைரக்டர்
மனசாட்சி தூண்டி விட்டு நான்
தவறு செய்தால்
என்னிடம் போர் புரியும்
ராணுவ வீரன்
சில நேரம் வாழ்வின் புதிர்களுக்கு
விடை கண்டு பிடித்து
கொடுக்கும் புண்ணியவான்
கொஞ்சம் பயம்
நிறைய இனிமை
வாழ்வின் படிக்கட்டுகளை
கட்டி கொடுத்து
சறுக்களை சமமாக்கி
விழ்வில் கை கொடுக்கும்
நல்ல என் நண்பன்
மறந்து போன நினிவுகளை
மனதில் நிறுத்தி
எதிர் காலத்தை
நிர்ணயம் செய்ய ...
என்னையும் இரண்டாகி
எதிர் எதிராய் அமரவைத்து
தீர்ப்பு செய்யும் நல்ல நீதிபதி
என்னை மட்டும் கவனிக்க
இந்த நேரம்
வாழ்வின் அர்த்தங்கள்
ஆயிரம் என்பதை படிக்க
தனிமை விட வேறு ஏதும் உண்டோ ....
சுகம் தான்
இது
உளி கொண்டு என் மூளை
செதுக்க படும் நேரம் தனிமை
நேசிக்கிறேன்...
என் தனிமை நேரங்கள் எனக்கு
சுகம் தான்..