தோழியே தயாராகிறாய் தாயாக என்னை சுமக்க
தோழியே
நான் உன் நண்பன் அல்ல
என்று சொல்லிவிட்டு
தயாராகிறாய் தாயாக
என்னையே குழந்தையாக சுமக்க
எத்தனை தவம் செய்தாலும்
கிடைக்காத வரம் நீ
எனக்கு தகுதி உண்டா இல்லை
என்றோ தெரியாமல் கலங்கும் பேதை
நட்பின் பாசத்தை சுமக்க முடியாத
என்னிடம் இன்னும் சுமக்க சொல்கிறாய்
தாய்மை பாசம் வேறு அல்ல
நட்பு வேறு அல்ல என்று புரிய வைக்கிறாய்
பாசம் புரிந்தும் திருப்பி செலுத்த
முடியாமல் கடனாளியாய் நான்