அனாதை

அனாதை...
அன்னையின் அன்பு கிடைக்காத ஒரு நிலை..

பெறும் சுகம் கண்டு
வெறும் காமம் கொண்ட
ஒரு ஆண்மையும்

பெறும் சுகம் கண்டு
வெறும் சுமை கொண்ட
ஒரு பெண்மையும்
அனாதை என்ற வார்த்தைக்கு அடித்தளமாக அமையும்..

தாய் மொழி பழக
தாய் இன்றி..
தன் நடை பழக
தந்தை இன்றி..
உணர்வுகள் பழக
உறவுகள் இன்றி..

உயிர் கொடுத்த உயிர்களை
தெரியாமலும்
தான் வந்த நோக்கம்
புரியாமலும்

சித்தம் கலங்க
நித்தம் நிற்கும்
இந்தக் குழந்தைகள்..

வம்ச வாரிசு இல்லையென்று
மாறி மாறி குறை கூறி
பிரியும் குடும்பங்களே

நீங்கள் கருணைத் தாய்மை அடையுங்கள்
உங்கள் ஐந்து விரல்கள்
அனாதையாய் நிற்கும்
இந்தக் குழந்தைகளின் ஒரு
சிறு பிஞ்சு விரலைப் பற்றிக் கொண்டு

அனாதை இல்லம் விட்டு
அன்னை இல்லம் தொட்டு
நுழையும் பொழுது.....

ஒரு கருணைத் தாய்க்கு
சமர்ப்பணம்...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (11-Mar-15, 8:09 am)
சேர்த்தது : செ மணிகண்டன்
Tanglish : anaadhai
பார்வை : 709

மேலே