ஆட்கொல்லி நோயா ஆட்கொண்ட நோயா

..."" ஆட்கொல்லி நோயா !! ஆட்கொண்ட நோயா ?? ""...

நம் சுயகட்டுப்பாடும்
சுகாதாரமும் சிந்திக்க
தெரிந்த மனிதனே
இன்று சீரழிந்து இந்த
சிலந்தி பின்னலிலே
முற்றுப்புள்ளி இல்லாத
தொடராய் சீல்படிந்து
கந்தலாகிப்போன சமூகம் !!!

சிகப்பு கம்பளத்தின்
மதிப்பறிந்த நாடே
சிகப்பு விளக்கு
பகுதியையும் தந்தது
பாதுகாப்பை உறுதிசெய்ய
மறக்காது நீயும் காப்புறை
அணிந்தே காமம்செய்
என்றே சொல்வதிங்கு
வேதனையின் உச்சமல்லவா !!!

சிலரின் இலாபத்திற்காகவே
பலரிங்கு மாண்டவாறே
ஆட்கொல்லி நோயால்
தகாத உறவுகளால்
நம் வாசல் வந்தடைந்த
இரக்கமற்ற இந்நோயால்
இன்னல்கள் இரத்தத்தோடு
வளர்வதால் சிசுவிலும் !!!

எங்கோ எப்பொழுதோ
எதிலேயோ படித்ததோ
பார்த்ததோ கேட்டதோ
ஆராய்சியின் பெயராலே
குரங்கோடு மனிதன் உடல்
சேர்வின் விளைவால்
இப்புவியில் புதிதாய்
பிறந்த இழிவான இந்நோய்க்கு
திரைமறை கதையுண்டு !!!

நன்னடத்தையை நாம்
ஒன்றுகூடி முன்னிறுத்தி
நாளைய தலைமுறையை
வலிமையை வளமாக்குவோம் ....

என்றும் உங்கள் அன்புடன் ,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (11-Mar-15, 12:59 pm)
பார்வை : 103

மேலே