உறவுகள்

காலை நேரம் வீட்டை விட்டு வெளியேறியதும் .............

சாலையோர சிறுவன் ...
அண்ணா வேலைக்கு கேளம்பியச்சா டாட்டா

பேருந்து நிலையத்தில் பூ விற்கும் அக்கா ...
என்னப்பா இப்போதா நீ எப்பவும் போற பஸ் போச்சு சரி வெயில்ல நிகிரியே இப்டி கொடைகுள்ள வந்து நில்லுப்பா...

பஸ்சில் தினமும் பார்க்கும் அப்பா வயதை ஒட்டிய முதியவர் ....
நீ வருவன்னு எனக்கு பக்கத்துக்கு சீட்டுல துண்டு போட்டு வெச்சிருக்கேன் உக்காந்துக்கோ பா ...

நடத்துனர் ...
என்ன தம்பி ரெண்டு நாலா ஆளையே காணு ஒடம்பெதும் சரி இல்லையா பாத்துக்கோ பா என்னென்னவோ வியாதி லா வருதுன்னு சொல்றாங்க ...

கம்பெனி வாசலில் இட்லி கடை போடும் அம்மா...
என்னப்பா வயசு புள்ள மூணு இட்லி தானா சாப்டுவ நல்லா சாப்டுப்பா காசு லா அப்புறம் குடுத்துக்கலாம்...



என்னவோ தெரில வீட்டில் இருக்கும் உறவுகளை விட வெளியில் கிடைக்கும் உறவுகள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

எழுதியவர் : vaasuki (11-Mar-15, 12:54 pm)
Tanglish : uravukal
பார்வை : 107

மேலே