நிலையென்று மாறும்

இனம்விட்டு மணமுடித்தால் உறவினின்று ஒதுக்கிடுவார்
சினங்கொண்டு பொறுமையின்றி பழிவாங்கத் துடித்திடுவார்
மனங்கொத்தி ரணமாக்கி வலிகண்டு உளம்மகிழ்வார்
அனல்மேலே புழுபோலே துடிப்பதையும் ரசித்திருப்பார்

துவண்டாலும் சரிந்தாலும் அரவணைக்க மறுத்திடுவார்
கவலையிலே உழன்றாலும் கடுகளவும் மனமிரங்கார்
சவமாகிக் கிடந்திடினும் கரையாது இறுகிநிற்பார்
புவனத்தில் கலப்புமணம் எளிதாகும் தினம்வருமோ....???

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Mar-15, 2:45 pm)
பார்வை : 364

மேலே