என் முடிக்கப்படாத சித்திரம்
மக்கள் கூடும் இடங்களிலும்
மசூதிக்கு அருகில் சென்றும்
தேவாலய பக்கத்தில் பார்த்தும்
திருகோயில் எங்கெங்கும்
சித்திரம் வரைவதற்க்காக
சில பொழுது உட்கார்ந்து
யாரவது மனிதநேயத்துடன்
இருப்பார்களா என்று பார்த்தேன்
எவரும் தென்படவில்லை
என் தூரிகையும் உலர்ந்து விட்டது
நான் கூட மனிதநேயம் மிக்கவனா
நம்பிக்கையும் அற்று போனேன்!