இயற்கையின் இன்பாக்கள்

ஊருக் குழைப்பவன் உள்ளமோ ஊற்று
உதவியோ நல்ஊற்று நீர்

இயற்கை செழித்திடின் வாழும் அழிந்திடின்
சாப்பாட்டில் மண்தான் விழும்

மழைவான் பொழிய மரவளம் ஓங்கிட
மண்வளம் ஓங்கும் மகிழ்ந்து

மாவிரிய பூவிரிய மாபூந்தோப் பும்விரிய
நல்லியற்கை வாழும் மகிழ்ந்து

மரக்கூட்டம் கூத்தாட பூந்தோட் டமுமாடும்
மண்மகிழ்ந்து கொண்டாடி டும்

------கவின் சாரலன்
குறள் வெண்பாக்கள் நீங்கள் அறிவீர்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Mar-15, 6:52 pm)
பார்வை : 163

மேலே