இன்றும் சாவேன்
தேடிய விரல்களெல்லாம்
தேடியபடி இருக்க..
மூடிய இமைகளெல்லாம்
மூடியபடி இருக்க..
என் மனம் மட்டும்
மெளனமாக மயங்கியதடி
உன் மார்புக் கூட்டில் தினமது
உறங்க தயங்கியதடி...
இரவெல்லாம் நம்மைத்
தூங்காமல் தாங்கும்
மெத்தையிடம் இரக்கமாய்
ஒன்று கேட்டுக் கொண்டேன்
இன்றாவது தூங்கிவிடு
என்னவளை நான் தாங்க வேண்டுமென்று...
தண்ணீர் குழாயடியில்
தளதளவென்று வளரும்
தாவரம் போல் உன்
காதல் மடியடியில்
என்றும் வாழ்வேன்
நீ சொன்னால்
இன்றும் சாவேன்...
செ.மணி