விவசாயி

நேற்றி வியர்வை ஆவியாகி
உடம்பெல்லாம் உருகி இறுகி
உழுது விளைந்த மணியெல்லாம் காசாகி
வந்த காசெல்லாம் கடனாகி
பிறர் வயிறும் மனதும் முழுதாகி
உன் வயிறெல்லாம் காலியாகி
வயிறை நிரப்பிய விஷம் அமிர்தமாகி
உயிர் மாய்த்து தியாகியாகி
மரணம் வீணாகி மடியும் விவசாயம்.....

இங்கு தற்கொலை செய்து மடிவது விவசாயியா? விவசாயமா?

எழுதியவர் : வலியுடன் நான்.... (12-Mar-15, 6:49 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 284

மேலே