பட்டணத்தில் கயல்குட்டி

கதிரவன் கண் கசக்கும் முன்னே
மலர்ந்து விட்ட விழியோடு
வாசல் தெளிக்க வில்லை
வண்ணகோலம் இடவுமில்லை

கஞ்சி வடிக்கவில்லை
கடவுளை வணங்கவுமில்லை
கால்கடுக்க காத்திருந்து
குடத்தில் நீர் எடுக்கவுமில்லை .

பிஞ்சு மழலைகளை
கொஞ்சி மகிழவில்லை
தோட்டத்து மரத்தில் - சேலை
ஊஞ்சல் கட்டி ஆடவில்லை .

கட்டாந் தரையில் படுத்து
வெண்ணிலா ரசிக்கவில்லை
கடலை பருப்பு வறுத்து
கடைவாயில் கொரிக்கவில்லை .

காதலன் முகம் பார்க்க
நாணி மறையவில்லை
பாவாடை தாவணியில் தேவதையாய் நானுமில்லை .

பட்டிக்காடு என்று தட்டிக்கழிக்கும்
இந்த
வாழ்க்கை முறை
பட்டணத்தில் எங்குமில்லை .
இதை கட்டிக்காக்க எவருக்கும்
இங்கு
ஆசையுமில்லை .!!!

எழுதியவர் : கயல்விழி (13-Mar-15, 3:39 pm)
பார்வை : 189

மேலே