கோட்டோவிய மழலைகள் 7 - ப்ரியன்

வறண்ட பூமியில்
வந்துதங்கி தந்திடும்
உயிர் துளி...

வறுமை எல்லையில்
மகிழ்ச்சி பெருக்கிடும்
மத்திய ரேகை...

வாழ்வு இருள்தனில்
வழிகள் தேடிடவைக்கும்
உந்து சக்தி...

குறைகள் இருந்தும்
வீடுகளை நிறைத்திடும்
மழலை செல்வம்...

ஒவ்வோர் அசைவிலும்
ஓராயிரம் சேதிசொல்லும்
புது சேய்மொழி...

வேகம் கோபங்கள்
விட்டிட துணைநிற்க்கும்
நம்ம சாமி...

பெரியோர் சிறியோரும்
பெற்றிட மீண்டும்ஏங்கும்
உன்னத பருவம்...

நன்றி:-
விமல்சந்ரன்(படம்) & கவிஜி(ஊக்குநர்)

எழுதியவர் : ப்ரியன் (13-Mar-15, 4:08 pm)
பார்வை : 219

மேலே