''அம்மா''

தத்தி தத்தி
நடக்கும் வயதில்
தவறி விழுந்தபோது
ஓடி வந்து வாரியடுத்து
மார்போடு தழுவிக்கொண்ட
என் தாயின் கரம் எங்கே....?

யாருக்கும் அறியாமல்
மண்பானை அடுக்களையில்
அரிசிக்குள் பணமுடிப்பு
எனக்காக
புதைத்து வைத்த
என் தெய்வம்
இப்போதெங்கே...?

கிழிந்துபோன
பழைய சேலை
முந்தானை ஓரத்திலே
தின்பண்டம் முடித்து வைத்து
எனக்காக காத்திருந்த
என் அன்னை
இப்போதெங்கே...?

ஊரெல்லாம்
மழை பெய்ந்து
வீடெல்லாம் ஓதம்காக்க
உறங்ககூட வழி இல்லாமல்
தான்மட்டும் அமர்ந்துகொண்டு
தன்மடியில் என்னை
உறங்க வைத்த
தாயே நீ இப்போதெங்கே...?

விளையாட்டு சண்டையிலே
விரலில் காயம்
பட்டதர்க்காய்
அழுது கண்ணீர் வடித்தாயே - இன்று
வாழ்க்கையே காயப்பட்டு
வாடிகிடக்கிறேனே
அம்மா நீ இப்போதெங்கே...?

என்னை ஆளாக்க
நீ பட்ட
கஷ்டங்களை
கண்ணால பார்த்த
கடன்காரன் நானம்மா....

உன் கடனை தீர்பதற்கு
நானின்று காத்திருக்கேன்
இன்னொரு
பிறவியெடுத்து
என்முன்னே வாருமம்மா....

பழையவைகள் எல்லாம்
நினைவுக்கு வந்தன
என் மனைவியின்
விரல்பிடித்து என்
இரண்டு வயது
மகன் நடக்கும்பொழுது...!!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (27-Apr-11, 3:55 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 462

மேலே