நியூட்டனின் 3ஆம் விதி

என்னை மாசுபடுத்தியே
ரௌத்திரமாய் எழ வைத்தாய்
சுனாமியாக !

என்னை மாசுபடுத்தியே
ரௌத்திரமாய் பிளக்க வைத்தாய்
பூகம்பமாக !

என்னை மாசுபடுத்தியே
ரௌத்திரமாய் அடிக்க வைத்தாய்
புயலாக !

இப்படி
என்னை மாசுபடுத்துவதாய்
உன்னை நீயே மாசுபடுத்தியே
ரௌத்திரமாய் வரவைத்தாய்
பெயர் தெரியா பல நோயாக !

ஆம்
நீ செய்யும் ஒவ்வொரு வினைக்கும்
நிச்சயம் எதிர்வினை உண்டு
நியூட்டனின் கண்டுபிடிப்பிற்கு
முன்னாலேயே !

எழுதியவர் : கவிபுத்திரன் (15-Mar-15, 10:48 am)
பார்வை : 270

மேலே