கோட்டோவிய மழலைகள் -18

செல்லமே
சிருங்கார ஓவியமே
சிறுபொழுதும்
தேயாத பௌர்ணமியே
துள்ளலே
அதுவொரு நடனமாகும்
தும்பிகள்
உனக்கு பொம்மைகளாகும்
வாய்மொழி குரலினிமை கேட்டு
வாத்திய இசைகள் மறக்கும்
சிறுபஞ்சு பாதங்கள் நடக்க
செம்பருத்தி பூஇன்னும் சிவக்கும்
சந்தனத்தில்
செதுக்கிசெய்த உருவமே
சகாராவுக்கு
வா-பாலையும் பூபூக்குமே
கவலைகளை
போக்குகின்ற கவின்தெப்பம்
கண்ணசைவில்
கடலும்குளத் துக்கொப்பம்
பிஞ்சுவிரல் பற்றிஅஞ் சுகம்துள்ள
மிஞ்சுசுகம் மேதினியில் பஞ்சம்
வஞ்சமற்ற நெஞ்சமது கொஞ்சும்
வாஞ்சையுடன் பிதாஉள்ளம் கெஞ்சும்.