இன்பத் தேடலில் இயற்கை எனும் அழகி

இயற்கை என்னும் அழகி
ஒருத்தி
புறப்பட்டாள் தன்னில் உள்ள இன்பம் தேடி ..

வறண்டு போன உடலோடு
வழியில் தவழ்ந்தாள்
பூமி மாதா .

உமிழ்நீரும் சுரத்தல் இன்றி
துள்ளிவரும் கங்கையவள்
துவன்று நின்றாள் தூரத்தில் ..

நிழல் கொடுக்கும் விருட்சத் தாய்
இடை அறுக்கப் பட்டு தரையில் வீழ்ந்தாள்
அழுது புலம்ப முடியாமல்
அப்படியே மரணித்தாள்..

இசையை பேசிய கடல் அன்னை மரண ஓலம் எழுப்பி சென்றாள்
மனிதரை விழுங்கி ஏப்பம் விட்டு ..

மலர் வாசம் சுமக்கும் தென்றலவள்
துர்நாற்றம் ஏந்தி சுற்றுகின்றாள்
சொல்லிட வழி இன்றி சோர்ந்து போனாள்.

வந்த அழகி புரிந்து கொண்டாள்
கர்வம் ஒடுங்கி அடங்கி நின்றாள்
பெயருக்கு மட்டுமே மதிப்பு என்று
இன்பத் தேடலில் அறிந்துகொண்டாள்..!!!

எழுதியவர் : கயல்விழி (15-Mar-15, 11:45 am)
பார்வை : 109

மேலே