என்னை மன்னிக்க வேண்டாம்

எனக்கு கட்டுரை எழுதத் தெரியாது.
எதையாவது கிறுக்கிவிட்டாவது போகிறேன்.கவிதையை விடுங்கள் பாடலைப் பற்றிப் பார்ப்போம். உள்ளத்தை தீண்டி உணர்ச்சிகளை மீட்டெடுக்கும் ஒரு அருமையான படைப்பாக பாடல் இருக்கவேண்டும்.
அவ்வகையில் அமைந்த எல்லாமே நான் பாடல் என்பேன். ஒற்றைப் பல் உடைந்து மீசை முறுக்கி உழுதுக்கொண்டிருக்கும் தாத்தாவிற்கும் அவருக்கு தூக்குச்சட்டியில் உணவை கொண்டுச் செல்லும் பாட்டிக்கும் தெரியவே தெரியாது யாப்பென்பது என்ன பாடலின் இலக்கணம் எதுவுமே. 'உந்தையும் எந்தையும்' என்று அவர்களிடம் ஆரம்பித்தால் ஒன்னுமே புரியல போல சோலியப் பாரு என்பார்கள் நிலம் பார்த்து நாத்து நட்டு 'தன்னானே தானன்னே எங்க சாமி வாரும் முன்னே' என்று பாடியவாறு. பாட்டு அசதியை நீக்கட்டும் இதயத்தின் சோம்பலை போக்க வேண்டும். பரிசுக்காக வேண்டுமானால் நூறு பேர் கூடி புரிபவர்களுக்கு மட்டும் புரியும்படி எழுதிவிட்டுப் போகலாம். ஆனால் நமது நோக்கம் அதுவா? இல்லை நண்பர்களே. யாருமே அப்படிச் செய்வதில்லை என்னறு சொல்லவில்லை. அப்படிச் செய்யப்படும் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்கிறேன். கட்டைவிரல் தேயத் தேய எழுதுவோம் தொடுதிரை உரசி உரசியே யாருக்காக? இணையம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் எத்தனை பேர் தெரியுமா? சொல்லலாம் காலம் மாறிவிட்டது எல்லோருக்கும் கணிணியைப் பற்றி தெரியும் என்று.. உண்மை அதுவல்ல. மண்ணை உண்மையாகவே நேசித்த கடைசித் தலைமுறை இருக்கிறது. அவர்களை சென்றடையவேண்டும். மற்றொரு கோணத்திலும் பார்ப்போம். புரோட்டா மாஸ்டர் என்ன பாவம் செய்தார்? அவருக்கும் உடல் சோர்வேடைகிறதே. அவன் துள்ள வேண்டும் . அவன் கேட்கும் ரேடியாவில் மாவைக்குத்தும் சத்தத்தை தாண்டியும் பாடல் அவன் காதில் விழுந்து வேலைப் பளுவைக் குறைக்க வேண்டும். டங்கா மாரி ஊதாரி தான் அதைச் செய்யும். வேலையை முடித்து அவன் மனம் இளையராஜாவை தேடு்ம். வீட்டு கடினங்களை சமாளிக்க உழவு நிலத்தை விற்றவனாகவும் இருக்கலாம். சொர்க்கமே என்ற பாடலை சென்னையில் இருக்கும் அவன் உறங்கும் முன் கேட்கயில் வழிகின்ற கண்ணீரில் இருக்கிறது அவ்வரிகளின் வெற்றி. இப்போதே முடிந்தால் எழுந்துச் செல்லுங்கள் கணிணியோடு உறவாடியது போதும். மனிதர்களை சந்தியுங்கள். வாட்சப்பை சிறிது மூடுங்கள். ஒரு குழந்தை உங்களை கடக்கலாம். தலை சாய்த்து மூக்கை உடைப்பேன் என்று செல்லமாக கூறுங்கள். ஹிஹி என்று சிரிக்கும். பேசுங்கள் . ஒரு முறை பார்த்த மனிதரை மறுமுறைப் பார்க்கயில் நல்லா இருக்கியா என கேளுங்கள். அன்றிலிருந்து அவர் உங்கள் நண்பர். உணர்வுளை தேடுங்கள் மதிப்பளியுங்கள். சுவரோரம் சாய்ந்து அமர்ந்த தாத்தாவிடம் பழைய கதை பேசுங்கள். அவரின் முதல் காதல் பற்றி கேட்டு பொக்கைவாய் சிரிப்பின் வெட்கத்தை படம் பிடியுங்கள். அதை பாடுபொருளாக்குங்கள். அவருக்கு புரியும் படி ஒரு கவிதைச் சொல்லுங்கள். பாட்டியிடம் உன் புருசனின் பேரை சொல் பார்க்கலாம் என்று அய்யயோ என்று அவர் காட்டும் தயக்கத்துக்கு எளிதாக ஒரு ஹைக்கூ எழுதுங்கள். ஆம் நண்பர்களே ஆழ்ந்து படிக்க வேண்டியதும் அதை பாமரர்க்கு புரியும் படி எடுத்துரைத்தலும் நமது கடமை. அதனால் தான் எத்தனையோ பேரை விட்டு உங்களை கவிஞனாக்கிருக்கிறது இயற்கை. கவிஞர்கள் பிறக்கிறார்கள் உருவாவதில்லை. இலக்கணம் பற்றி எதுவுமே தெரியாமல் ஆரம்பக் காலங்களில் பலர் எழுதியிருப்போம் அல்லவா. தவறு இருப்பின் என்னை நீங்கள் மனனிக்க தேவையில்லை. இவனுக்கு தான் கட்டுரை எழுதத் தெரியாதே என்று சொல்லிவிட்டு போகலாம்.
--நிசங்களுடன் கனா காண்பன்

எழுதியவர் : கனா காண்பவன் (15-Mar-15, 11:13 am)
சேர்த்தது :
பார்வை : 175

சிறந்த கட்டுரைகள்

மேலே