வலி கொண்ட சொந்தங்கள்

பெற்றோரால் வலி கொண்டவனுக்கு
பெருமைகள் சொந்தம்
கல்வி இல்லாமல் வலி கொண்டவனுக்கு
கஷ்டங்கள் மட்டுமே சொந்தம்
சில நண்பனால் வலி கொண்டவனுக்கு
நரகமே சொந்தம்
பொறாமை கொண்ட சொந்தத்தால் வலி கொண்டவனுக்கு
உழைப்பு மட்டுமே சொந்தம்
காதலில் வலி கொண்டவனுக்கு
கவிதைகள் சொந்தம்
பணத்தால் வலி கொண்டவனுக்கு
பட்டறிவே சொந்தம்
இப்படி வலிகள் கொண்டு வாழ்பவனுக்கு
வைராக்கியங்கள் மட்டுமே சொந்தம்
வலிகள் மட்டுமே சொந்தம் கொண்டவனுக்கு
மருபிரவியாவது சொர்க்கத்தில் பிறந்திட
கடவுளை சொந்தம் கொள்கிறேன்
அவனும் வலி கொடுக்க
இனி எங்கே சொந்தம் கொள்ள!

எழுதியவர் : இன்பகுமார் (15-Mar-15, 2:05 pm)
பார்வை : 151

மேலே