உள்வெளி

மிதியடிகளை வெளியே விடவும்,
என்று போட்டிருந்தது நிஜம்தான் !
நீயும் சரியாகத்தான் நடந்துகொண்டாய் !
ஆனால்,
என் அலுவலகத்திற்குள் உலவிய நேரம்,
நீ பதித்த அடிகள் மென்மையாய் மெதுவாய்,
என் மனதிற்குள் விழத்தான் செய்தது !
உன்னை அறியாமல் என்னை அறிந்து !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (15-Mar-15, 7:55 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 52

மேலே