மழை என்றதும்
மழை என்றதும்
உடனே தோன்றுகிறது...
வாசலில் காயபோட்ட
துவைத்த துணிகள்
மொட்டை மாடியில் பரப்பி வைத்த
மிளகாய் வத்தல்
பள்ளிக்கு சென்று திரும்பும்
பிள்ளைகள்
கடைக்கு சென்று திரும்பாத
கணவனோ மனைவியோ..
விரிசல் விட்ட வீட்டில்
ஒழுகும் சில இடங்கள்...
இப்படியாக
எவ்வளவோ தோன்றுகிறது
ஆனாலும்
யாருக்குமே தோன்றுவதில்லை
கொஞ்ச நேரம் நனையலாமென்று...
********** ஜின்னா **********