காதல் போதை

துளிக்காதல் போதைகொண்டேன்....
அடைத்தாயே விழிச்சிறையில்.....!

தப்பிக்க வழிதேடி
அகப்பட்டேன் இதய அறையில்.....!

அந்த இரத்தத்தில்
கலந்து சிவந்தேனடி....!
அன்று நீ
வெட்கத்தில்.....நான்தந்த
முத்தத்தில் சிவந்ததைப்போல.....!

அடிவானமெங்கும் இளஞ்சிவப்பு...!வெட்கத்தில்
வடிவான உன்முகத்தின்
பிரதிபலிப்பு .....!

எழுதியவர் : இரா.வீரா (16-Mar-15, 8:10 pm)
பார்வை : 96

மேலே