காதலிகாதலி

தினமும் ஒரு
பூச்செடியின் காதலை
ஏற்றுக் கொள்கிறாய்....!
என் காதல் மட்டும்
ஏனடி ஏற்க மறுக்கிறாய்...?
நானும் உனக்காக
ஒருப்பூ ஏந்தியே செடியானேன்...!
மரம் மாதிரி
ஏன் நிற்கிறாய்....?
என்றுநீ கேட்டபோதுதான் உணர்ந்தேன்
காதல் வைத்து
காத்திருந்தவன் காட்டுமரமானதை....!
என்றேனும் ஒருநாள்
ஒத்துக்கொள்வாளென எனை
பொத்திப் போற்று வளர்க்கிறது
காதல்.....!
ஒருநாளில்லை ஒருநாள்பார்
நான் இப்படியே வளர்ந்துசென்று....!
இந்திர லோகம்கடந்து....
மந்திர. மேகம்புகுந்து.....
தந்திர மழையாகவந்து.....உன்
தங்கமேனி நனைக்கபோகிறேன் என்
அங்கம் கொண்டுனை அணைக்கப்போகிறேன்.....!
அப்போது பார்க்கிறேன்....!
எப்படி நீ என்னை
எடுந்தெறிந்துவிட்டு போகிறாயென்று.....!
வேறு வழியில்லை....
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
உண்மையை.....நீ
எனை காதலிக்கிறேனென்று.....!