அந்தோ பரிதாபம்
அந்தோ பரிதாபம்!
அனைத்தும் எதிர்காலம் என்றென்னும் பெற்றோர் கொடுத்தனுப்பும் அறிவு மூட்டையைச் சுமந்தபடி தள்ளாடி நடந்துவந்து பங்கிட்டுக்கொள்ள இயலாப்பங்கு வாகனத்தில் ஏறி அடைபட்டுச் சிதைபட்டு மூச்சயிர்த்து
சமூகத்தின் ஒற்றுமையைக் கற்றுக்கொண்ட பள்ளிக்குழந்தைகளின் தியாகங்களை நினைத்தால்
அந்தோ பரிதாபம்!
அன்னை மடியில் தவழ்ந்து சலித்த சிறு இடைவெளியில் சமுதாயக்கடலில் துடுப்பில்லாப் படகில் பயனிக்க வழியனுப்பப்படும் அவலநிலையை நினைத்தால் அந்தோ பரிதாபம்!
அதன் ஆசைகளும் கனவுகளும் மறுக்கப்பட்டு காலை முதல் மாலை வரை அட்டவணையிட்ட வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் பெற்றோரின் சுயநலமறிந்தால் அந்தோ பரிதாபம்!
மூன்றுவயதில் நேரமின்மை, பதற்றம்,கோபம், வெறுப்பு, எரிச்சல், பொறாமை,சலிப்பு என்ற நடத்தைகளைக் கற்றுக்கொடுக்கும் சமூகத்தின் நிலை கண்டால் அந்தோ பரிதாபம்!
துள்ளி விளையாடும் வயதில் பள்ளிக்குச் செல்லென்று பொதி சுமக்கும் கழுதைபோல் முதுகின் மீது மூட்டை ஏற்றி முத்தம் தந்து கொஞ்சம் ஆறுதலாக டாடா காட்டி அனுப்பும் பெற்றோர்களே,
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் கொஞ்சும் வயதில் பள்ளிக்குச் சென்றால் அனைத்தையும் இழந்தவன் என்றதை அடைவானென்று!
தன் மகன் மருத்துவனோ, வக்கீலோ,பொறியாளனோ,
ஆட்சியரோ ஆகவில்லை எனினும் நல்ல மனிதனாக வேண்டுமென்று எண்ணிக்கொள்ளுங்கள்.............................

